லஞ்சமும் இல்லை அங்கும் இங்கும் அலையும் தொல்லை இல்லாமல் ஆன்லைனில் பட்டா வாங்குவது எப்படி

லஞ்சமும் இல்லை அங்கும் இங்கும் அலையும் தொல்லை இல்லாமல் ஆன்லைனில் பட்டா வாங்குவது எப்படி

நீங்கள் ஆன்லைனில் பட்டா பதிவு மற்றும் உங்களின் நிலத்தை ஆன்லைனில் ரெஜிஸ்ட்டர் செய்யலாம், நாம் ஒரு சொத்தை வாங்கும்போது பட்டா கிரயம் செய்வது மற்றும் பத்திரம் ரெஜிஸ்ட்ரேசன் போன்ற பல வேலைகளுக்கு நேரில் போய் அங்கும் இங்கும் அலையை வேண்டி இருந்தது, மேலும் மக்கள் பட்டா மாறுதலுக்கு அடிக்கடி அலைச்சலுக்கு உள்ளாகும் வேண்டி நிலை ஏற்பட்டு வந்தது, இது தவிர லஞ்ச இல்லாமல் வேலையும் நடக்காது, இது போன்ற பிரச்சனை போக்க ஆன்லைன் மூலம் பாட்டா வாங்கும் வசதியை அரசு சில நாட்களுக்கு முன்பு கொண்டு வந்தது.மேலும் இதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் அலைச்சல் குறையும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

நீங்கள் ஒரு வீடு வாங்குகிர்கள் என்றால் முதலில் பத்திரம் ரெஜிஸ்டர் மற்றும் பட்டா வாங்குவது அவசியமாகும், பத்திரம் வாங்குவது என்பது யார் யாருடைய பெயருக்கு நிலத்தை விற்கப்பட்டது யார் வாங்கி இருக்கிறார் என்பது ஆகும் மேலும் எதிர்காலத்தில் எதாவது ஒரு பிரச்சனை வரும்போது பட்டா இருந்தால் எளிதாக சமாளிக்க முடியும் நாம் ஒருவரிடம் இருந்து சொத்து வாங்குவது மற்றும் சொத்து வாரிசு போன்ற பாகபிரிவினை செய்வதற்க்கு பட்டா மற்றம் ரெஜிஸ்ட்டர் செய்வது அவசியமாகும் அது எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

முதலில் ரெஜிஸ்ட்ரேசன் செய்யும்முன் நிலத்தின் உரிமையாளர் பெயர், கதவு என் நீங்கள் வாங்கும் வீடு அல்லது நிலம் எந்த இடத்தில் இருக்கிறது அதாவது நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி போன்ற தகவல் தேவைப்படும்

ஆன்லைனில் பட்டா ரெஜிஸ்ட்ரேசன் மற்றும் பட்டா மாறுதலுக்கு எப்படி வின்னபிப்பது?

ஆன்லைன் மூலம் பட்டா வாங்குவதற்கு, தமிழ்நாடு அரசின் வெப்சைட்டன eServices, edept.tn.gov.in க்கு சென்று, நில உரிமையாளர் விவரங்களைப் பதிவு செய்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

  • தமிழ்நாடு அரசின் நில ஆவணங்கள் இணையதளமான eservices.tn.gov.in செல்லவும்.
  • அதில் பட்டா மாறுதல் விண்ணபிக்க (Apply Patta transfer) என்ற ஐகான் தட்டவும் அதை க்ளிக் செய்தவுடன் https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற தத்திற்கு போகும்.
  • அதில் நீங்கள் உங்கள் மொபைல் நம்பர் கொடுக்க வேண்டும். அந்த நம்பருக்கு SMS மூலம் OTP வரும். அதை கொடுத்து லாக்-இன் செய்ய வேண்டும். அதில் பயனர் பெயர், பெற்றோர், ஈமெயில் முகவரி, பிறந்த தேதி, பாலினம், முகவரி உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்க வேண்டும். இது விண்ணப்பதாரரின் விவரமாக எடுத்துக் கொள்ளும்.
  • அதன் பின்னர் நீங்கள் வாங்கிய நிலம் அல்லது வீடு எந்த மாவட்டத்தில் உள்ளது கிராமம்/ நகரம் சார்பதிவாளர் அலுவலகம், ஆவணம் பதிவு செய்யப்பட்ட தேதி (சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்ட நாள்),ஆவணம் பதிவு ஏன் போன்ற பல வரிசையாக கொடுக்க வேண்டி இருக்கும்
  • அதன் பிறகு அதில் கேட்கப்படும் ஆவணத்தை சமரக்க வேண்டி இருக்கும் அதில் கேட்கப்பட்டிருக்கும் அதாவது
  • சொத்து வரி ரசீது,
  • மின் கட்டண அட்டை,
  • குடும்ப அட்டை,
  • வாக்காளர் அட்டை
  • ஆதர் கார்ட்
  • அனைத்தும் டாக்யுமென்ட் வடிவில் அப்லோட் செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர், விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை இன்டர்நெட் வழியில் செலுத்த வேண்டும். யுபிஐ மூலமாகவும் கட்டணம் செலுத்தலாம்.
  • பட்டா மாற்றம் என்றால் விண்ணப்பக் கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும். உட்பிரிவுடன் பட்டா மாற்றம் என்றால் அதற்கான தொகையாக ரூ.400, விண்ணப்பக் கட்டணம் ரூ.60 சேர்த்து செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய பிறகு விண்ணப்பதாரரின் மொபைல் நம்பருக்கு , பட்டா மாறுதல் தொடர்பாக விண்ணப்பித்த தேதியை குறிப்பிட்டு அந்த விண்ணப்பத்தின் நம்பர் உடன் சேர்த்து விண்ணப்பம் பெறப்பட்டது என்றும்,
  • அதற்கான சேவைக் கட்டணமாக பெற்றுக் கொண்ட தொகை குறித்த விவரம், பட்டா மாறுதல் மனு தொடர்பாக புல விசாரணைக்கு வருவாய்த் துறை அலுவலர்களால் (கிராம நிர்வாக அலுவலர் / நிலஅளவர்) தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மெசேஜ் (SMS உங்கள் மொபைலுக்கு வரும்.

அதில் குறிபிட்டுள்ளது போல வேலை நடைபெறும் மேலும் அவ்வாறு நீங்கள் விண்ணபித்த தகவலை பற்றி தெரிந்து கொள்ள https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற தளத்திற்கு நீங்கள் ஆன்லைன் ஸ்டேட்டஸ் தெரிந்து கொல்லம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo