கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு நீங்கள் AI பயன்படுத்தி வித விதமாக Prompt மூலம் போட்டோ உருவாக்க முடியும். இதில் நீங்கள் உங்களின் போட்டோவை பயன்படுத்தி போட்டோ போடுவதன் மூலம் பார்ப்பவர்கள் அசந்து போவாங்க அனால் அதற்காக ChatGpt யில் prompt உருவாக்கி வித விதாமாக் அசத்தலாம் அது எப்படி பார்க்கலாம் வாங்க
அழகிய ராதா ராணி, அமைதியான புன்னகையுடன், நீண்ட கருநிற கூந்தல், மயில் இறகு அலங்கரித்த தங்கக் குழல் கையில், சிவப்பு நிற பாரம்பரிய புடவை, தங்க நகைகள், மென்மையான தெய்வீக ஒளி, மலர்கள் நிறைந்த இயற்கை பின்னணி, ultra-realistic, cinematic lighting, 4K.
பெண் அழகான பாரம்பரிய இந்திய உடையில், நேர்த்தியான நகைகள் மற்றும் ஜிமிக்கி காதணிகளுடன், மகிழ்ச்சியான புன்னகையுடன் நிற்க வேண்டும். அவரது கையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட வெண்ணெய் நிரம்பிய மண் பானை (மட்கி) இருக்க வேண்டும். பானையின் மேல் ஒரு அழகான மயில் இறகு இருக்க வேண்டும்.
பெண்ணின் பேக்ரவுண்டில் தெய்வீகமான ஸ்ரீ கிருஷ்ணரின் நீல நிற உருவம் தோன்ற வேண்டும். கிருஷ்ணர் அழகான கிரீடம், மயில் இறகு, தங்க நகைகள் மற்றும் மலர் மாலைகளுடன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பது போல் இருக்க வேண்டும்.
சுற்றிலும் மயில் இறகுகள், மலர் மாலைகள், தொங்கும் அலங்கரிக்கப்பட்ட வெண்ணெய் பானைகள் மற்றும் சிவப்பு நிற பட்டுத் துணிகள் காற்றில் அசையும் காட்சி இருக்க வேண்டும். பேக்ரவுண்டில் தங்க நிற ஒளிக்கதிர்கள், மென்மையான புகை, ஒளித்துகள்கள் மற்றும் தெய்வீக ஒளிவட்டம் இருக்க வேண்டும். முழு காட்சியும் பிரம்மாண்டமான, ஆன்மிகமான, மகிழ்ச்சியான, பாரம்பரியமான மற்றும் சினிமாட்டிக் ஜன்மாஷ்டமி விழா போஸ்டர் போல இருக்க வேண்டும்.
Photorealistic, ultra detailed, realistic Indian face, natural skin texture, cinematic lighting, warm golden glow, dramatic depth of field, premium festive poster, rich colors, highly detailed traditional jewellery, 4K quality, professional composition.
போஸ்டரில் அழகான எழுத்தில்: “Happy Janmashtami” என்று மட்டும் தெளிவாகவும் சரியான spelling-உடனும் சேர்க்கவும். மற்ற எந்த எழுத்தும், watermark அல்லது logo-வும் வேண்டாம்.”
கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் நபரின் முகம், முக அமைப்பு, கண்கள் மற்றும் இயல்பான தோற்றத்தை மாற்றாமல் பாதுகாத்து, அழகான கிருஷ்ண ஜெயந்தி தீமில் புகைப்படத்தை மாற்றவும். நீல நிறம் மற்றும் மஞ்சள் நிற பாரம்பரிய ஆடை, அழகான மயில் இறகு கிரீடம், தங்க ஆபரணங்கள் மற்றும் கையில் தங்க நிற புல்லாங்குழல் சேர்க்கவும். பின்னணியில் அழகான கோவில், மலர் அலங்காரம் மற்றும் ஒளிரும் தீபங்கள் இருக்கட்டும். மென்மையான தங்க நிற ஒளி, இயற்கையான சரும நிறம், realistic skin texture, cinematic lighting, soft bokeh, ultra realistic, 4K photography.
இதையும் படிங்க:ரக்ஷா பந்தன் உங்கள் அன்ம்பான சகோதரனுடன் ChatGPT பயன்படுத்தி AI மூலம் போட்டோ போட்டால் அசந்து போவாங்க
புகைப்படத்தில் உள்ள நபரின் முகம் மற்றும் இயல்பான தோற்றத்தை அப்படியே வைத்துக்கொண்டு, அழகான ஜன்மாஷ்டமி இரவு கொண்டாட்டக் காட்சியாக மாற்றவும். சுற்றிலும் ஏராளமான சிறிய எண்ணெய் விளக்குகள், தொங்கும் விளக்குகள், மலர் அலங்காரங்கள் மற்றும் மயில் இறகுகள் இருக்கட்டும். மென்மையான நிலவொளியுடன் தங்க நிற தீப ஒளி கலந்து முகத்தில் அழகாக விழ வேண்டும். பின்னணியில் கிருஷ்ணர் சிலை மென்மையாக blur ஆகத் தெரிய வேண்டும். magical atmosphere, natural skin texture, cinematic night photography, realistic lighting, soft bokeh, 4K HD.