AC Bill: ஒரு நாளைக்கு 10 மணி நேரம் AC ஓடுதா அப்போ உங்க கரண்ட பில் எவ்வளவு வரும் என பார்க்கலாம் வாங்க
கோடை காலம் தொடங்கிவிட்டது. சிலர் AC பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.சிலர் முதலில் கூலரைப் பயன்படுத்திவிட்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு ஏசிக்கு மாறுவார்கள். ஏன் என்றால் நம்முள் பலருக்கு AC ஓடினால் கரண்ட் பில் அதிகமாகும் என பயம் இருக்கும் . இந்திய குடும்பம் குறைந்த மின்சார கட்டணத்தில் ஏசியின் குளிர்ச்சியை விரும்புகிறது. இந்த வெயில்காலத்தில் , மக்களிடையே பேசப்படும் ஒரு தலைப்பு என்னவென்றால், இந்த மாதம் ஒரு பெரிய பில் வந்துவிட்டது. உங்கள் ஏசி பில்லை குறைப்பதற்க்கு முன்பு கணக்கிடலாம். இது பெரிய அளவில் சாத்தியமாகும். மேலும் நாம் Ac பில் எப்படி குறைப்பது மற்றும் Ac பில் தொகையை எப்படி கணக்கிடுவது என பார்க்கலாம் வாங்க.
Surveyஉங்கள் AC எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்தும் என்பதைச் சரிபார்க்கலாம்
முதலில் https://app1.tangedco.org/dsmenergy/ecalculator.xhtm இந்த லின்க்கு செல்வதன் மூலம் கால்குலேட்டர் உங்கள் முன் திறக்கும். தேவையான தகவல்களை நிரப்புவதன் மூலம் மின்சார கட்டணத்தை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

மின்சாரக் கட்டணத்தை இப்படிக் கண்டறியவும்
வலைத்தளத்தைப் பார்வையிட்ட பிறகு, முதலில் நீங்கள் அப்ளயன்ஸ் டேப்பை லைக் கிளிக் செய்ய வேண்டும். ஏசி தவிர, கூலர், கீசர், ஹீட்டர், ஃபேன் போன்ற பிற வீட்டு அப்ளயன்ஸ் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும். நீங்கள் ஏசியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் வீட்டில் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஒன்று, ஒன்றரை அல்லது இரண்டு டன் ஏசியைத் தேர்ந்தெடுக்கவும். வலைத்தளத்தில் விண்டோ அல்லது ஸ்பிலிட் ஏசிக்கு தனி விருப்பம் இல்லை. டன்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. டன்னைத் தேர்ந்தெடுத்த பிறகு, வாட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஆனால் வெப்சைட்டில் கிடைக்கக்கூடிய இதில் விருப்பம் 2250 வாட்ஸ் ஆகும். இது போன்ற பிற டேபையும் நிரப்பிக் கொண்டே இருங்கள். தினமும் 10 மணி நேரம் மற்றும் 30 நாட்களுக்கு ஏசியை இயக்குவதற்கான மின்சார செலவை நாங்கள் கணக்கிடலாம்.
ஒரு நாளைக்கு 10 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் பில் வரும்
ஒரு மாதத்திற்கு தினமும் 10 மணி நேரம் ஏசி இயக்கப்பட்டால், 675 யூனிட் மின்சாரம் நுகரப்படும் என்று வெப்சைட் எங்களிடம் கூறியது. இருப்பினும், மொத்த பில் எவ்வளவு இருக்கும் என்பதை வெப்சைட் தெரிவிக்கவில்லை. உண்மையில், இது உங்கள் கனெக்சன் பொறுத்தது. பொதுவாக, ஏசி பொருத்தப்பட்ட வீடுகளில், மின்சார இணைப்பு 4 கிலோவாட் ஆகும். நாங்கள் 675 யூனிட்டுகளை யூனிட்டுக்கு ரூ.7 வீதம் பெருக்கினோம், பில் ரூ.4725 ஆனது. இருப்பினும், வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. இதன் பொருள் நீங்கள் ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமான பில் செலுத்த வேண்டியிருக்கும்.
AC கணக்கிடுவதன் மூலம் என்ன நன்மை கிடைக்கும்.
ஏசியை இயக்கும்போது எவ்வளவு மின்சாரம் நுகரப்படும் என்பதைக் கணக்கிடுவதன் மூலம், தேவையற்ற செலவினங்களைத் தவிர்க்கலாம். உங்கள் ஏசி எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது என்பது பற்றிய யோசனையும் உங்களுக்கு இருக்கும். இந்தத் தகவலுக்காக, நாட்டின் பெரிய மாநிலமான தமிழ்நாடு பிரதிநிதித்துவப்படுத்தும் அரசு வெப்சைட்டை பயன்படுத்தினோம்.
இதையும் படிங்க :வீட்டில் சேதாரம் இல்லை ஓட்டை போட தேவையும் இல்லை டாப் பெஸ்ட் Portable AC
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile