Sony Bravia யின் புதிய 4K TV அதிரடி அம்சங்களுடன் அறிமுகம்,அசத்தும் சவுண்ட் தியேட்டர் போன்ற அனுபவம் பெறலாம்
Sony இந்தியாவில் புதிய 2025 Bravia டிவி வரிசையில் அறிமுகம் செய்துள்ளது
இதன் பெயர் Sony Bravia 2 II ஆகும், இது புதிய மிக சிறந்த மாடலில் ஒன்றாகும்
இந்த வரிசையின் கீழ் 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் சைஸில் அறிமுகம் செய்தது
Sony இந்தியாவில் புதிய 2025 Bravia டிவி வரிசையில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் இது புதிய மிக சிறந்த மாடலில் ஒன்றாகும் இதன் பெயர் Sony Bravia 2 II ஆகும், மேலும் இந்த வரிசையின் கீழ் 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் சைஸில் அறிமுகம் செய்தது மேலும் இதன் விலைகள் மற்றும் இந்த டிவியில் இருக்கும் சுவர்சமான அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveySony Bravia 2 II இந்திய விலை தகவல்.
இந்தியாவில் இதன் விலையைப் பற்றிப் பேசுகையில், நிறுவனம் அதன் 43 இன்ச் மாடலின் விலையை ரூ,69,900 ஆகவும், 55 இன்ச் மாடலின் விலையை ரூ,99,900 ஆகவும் நிர்ணயித்துள்ளது. தற்போது 50 இன்ச் வேரியண்டின் விலை வெளியிடப்படவில்லை. இந்த மாடல் பிராவியா சீரிஸ் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் 4K டிவி ஆகும், இது பிரீமியம் அம்சங்களுடன் மலிவு விலையில் கிடைக்கிறது.
Smart just got stylish with the new Sony BRAVIA 2 II series — where immersive sound meets intuitive viewing. Powered by Google TV, Dolby Atmos, & the all new Floating design, its entertainment redefined. Available in 139 cm (55) & 108 cm (43).
— Sony India (@sony_india) May 12, 2025
Shop now: https://t.co/cbp9L5kqdt pic.twitter.com/2UJ49Yhhrm
Sony Bravia 2 II சிறப்பம்சம்.
Sony Bravia 2 II அம்சங்கள் பற்றி பேசினால் இது ஒரு 4K LCD டிவி ஆகும், இதில் Direct LED பேக்லைட்டிங் வழங்கப்படுகிறது 60Hz நேட்டிவ் ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது மேலும் இதில் 4K XR-Reality Pro உடன் வருகிறது இது மிக சிறந்த பிக்ஜர் குவாலிட்டி வழங்குகிறது இதனுடன் இதன் ஸ்க்ரீன் சைஸ் பற்றி பேசினால் இது 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் சைஸில் வருகிறது மேலும் இதில் HDR சப்போர்டுடன் இந்த டிவி IMAX Enhanced, HDR10 மற்றும் HLG போன்ற பார்மட்ஸ் சப்போர்ட் வழங்குகிறது இருப்பினும் இந்த டிவியின் சைஸ் பற்றிய தகவல் இல்லை.
பிராவியா 2 II கூகிள் டிவி தளத்தில் இயங்குகிறது, இது பயனர்களுக்கு ஸ்மார்ட் மற்றும் உள்ளுணர்வு இடைமுகத்தை வழங்குகிறது. இது கூகிள் உதவியாளர் மற்றும் அமேசான் அலெக்சா போன்ற குரல் கட்டளை அம்சங்களை ஆதரிக்கிறது. இது தவிர, கூகிள் காஸ்ட் மற்றும் ஆப்பிள் ஏர்ப்ளே 2 போன்ற வயர்லெஸ் ஆப்சன் ஸ்க்ரீன் ஷேரிங்க்கு கிடைக்கின்றன, இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் டிவிக்கு கன்டென்ட் எளிதாக அனுப்பலாம்.
பிராவியா 2 II டால்பி அட்மாஸ் மற்றும் DTS\:X ஆடியோ தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் இரண்டு 10W ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இது பயனர்களுக்கு ஒரு அற்புதமான சவுண்ட் அனுபவத்தை வழங்கும்.
கேமின்காக இந்த டிவி பிளேஸ்டேஷன் 5 க்காக பிரத்யேகமாக டிசைன் பல கேமிங் அம்சங்களை வழங்குவதால் இது ஒரு சிறந்த தேர்வாகும். இவற்றில் ஆட்டோ HDR டோன் மேப்பிங், ஆட்டோ ஜெனர் பிக்சர் மோட் மற்றும் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) ஆகியவை அடங்கும், இது கேமிங் அனுபவத்தை மென்மையாகவும் பதிலளிக்கக்கூடியதாகவும் ஆக்குகிறது. மேலும், HDMI 2.1 போர்ட்கள் மற்றும் கேம் மெனு போன்ற மேம்பட்ட கட்டுப்பாடுகள் விளையாட்டாளர்களுக்கு இதை இன்னும் சிறப்பானதாக்குகின்றன.
இதையும் படிங்க TCL யின் இந்த டிவியில் அதிரடியாக ரூ,14,000 டிஸ்கவுண்ட் பேங்க் மற்றும் கூப்பன் நன்மையுடன் வேற லெவல் ஆபர்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile