Haier யின் C90 மற்றும் C95 OLED TVகள் இந்தியாவில் அறிமுகம் 65-W சவுண்ட் குவலிட்டியுடன் வீடு இருக்கும் தியேட்டர் போல

HIGHLIGHTS

Haier இந்தியாவில் அதன் லேட்டஸ்ட் OLED TV அறிமுகம் செய்துள்ளது,

இந்த வரிசையின் கீழ் C90 மற்றும் C95 மாடல்கள் கொண்டு வந்துள்ளது

இந்த இரு மாடல் டிவியிலும் ஸ்லீக் பேசேல் லெஸ் டிசைன் கொண்டுள்ளது

Haier யின் C90 மற்றும் C95 OLED TVகள்  இந்தியாவில் அறிமுகம் 65-W சவுண்ட் குவலிட்டியுடன் வீடு இருக்கும் தியேட்டர் போல

Haier இந்தியாவில் அதன் லேட்டஸ்ட் OLED TV அறிமுகம் செய்துள்ளது, இந்த வரிசையின் கீழ் C90 மற்றும் C95 மாடல்கள் கொண்டு வந்துள்ளது, இந்த C90 OLED TV கீழ் 55, 65 மற்றும் 77 இன்ச் சைஸில் அறிமுகம் செய்தது அதுவே இதன் C95 OLED TVs யில் 55 மற்றும் 65 இன்ச் சைஸ்களில் கொண்டு வந்துள்ளது மேலும் இந்த இரு மாடல் டிவியிலும் ஸ்லீக் பேசேல் லெஸ் டிசைன் கொண்டுள்ளது மேலும் இதன் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Haier C90, C95 OLED TV விலை தகவல்

Haier இந்த இரு டிவியின் விலை பற்றி பேசினால், Haier C90 ஸ்மார்ட் டிவியின் ஆரம்ப விலை ரூ. 1,29,990 விலையில் கிடைக்கும், அதே நேரத்தில் Haier C95 ஸ்மார்ட் டிவியின் ஆரம்ப விலை ரூ. இது ரூ.1,56,990 ஆக வைக்கப்பட்டுள்ளது. இவற்றை Haier இந்திய வெப்சைட்டிலிருந்து வாங்கலாம் . இந்த விற்பனை மே 1 முதல் தொடங்கியது. இது தவிர, ஸ்மார்ட் டிவிகள் முக்கிய எலக்ட்ரோனிக் கடைகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்களிலும் வாங்குவதற்குக் கிடைக்கும்.

Haier C90 and C95 OLED சிறப்பம்சம்.

Haier C90 சீரிஸ் கீழ் 55-inch, 65-inch, மற்றும் 77-இன்ச் ஸ்க்ரீன் சைஸில் வருகிறது அதுவே இதன் C95 55-இன்ச் மற்றும் 65-இன்ச் வேரியன்ட் சைஸில் வருகிறது, இந்த ஸ்மார்ட் டிவி சீரிஸ் OLED பேணல் உடன் மெல்லிய பெஸல் லெஸ் கொண்டுள்ளது மேலும் இதில் மெட்டல் ஸ்விவேல் ஸ்டேண்ட் உடன் வருகிறது

மேலும் இந்த இரு டிவியும் OLED பேணல், டீப் ப்ளாக் மற்றும் தெளிவான கலர் வழங்குகிறது இதனுடன் இது Dolby Vision IQ மற்றும் HDR10+ மூலம் மிக சிறந்த பிக்ஜர் குவாலிட்டி வழங்குகிறது, MEMC டேக்நோலாஜி மிக சிறந்த பிக்ஜர் குவாலிட்டி அனுபவத்தை வழங்குகிறது அனுபவத்தை வழங்குகின்றன. கேமிங்கிற்கு, C95 மாடல் 144Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. அதே நேரத்தில், C90 மாடலில் 120Hz ரெப்ரஸ் ரேட் கிடைக்கிறது.

மேலும் இதில் ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசினால் இது Google TV அம்சம் மற்றும் ப்ரீ வொயிஸ் கண்ட்ரோல் வழங்குகிறது மேலும் இதில் வொயிஸ் கமண்ட்ஸ் ஆகியவை வழங்குகிறது இதை தவிர Haier C90 மற்றும் C95 OLED சீரிஸ் உடன் 3GB யின் ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் உடன் பல ஆப்கள் இருக்கும்.

மேலும் இந்த டிவியில் கனெக்டிவிட்டி பற்றி பேசினால் இதில் Haier C90 மற்றும் C95 OLED சீரிச்களில் Wi-Fi 6, Bluetooth 5.2, HAICAST மற்றும் இன்பில்ட் Chromecast சப்போர்ட் ஆகியவை அடங்கும். இந்த டிவியில் Bluetooth Sound Cast-ஐயும் சப்போர்ட் செய்கிறது , இதனால் பயனர்கள் TVயின் ஸ்பீக்கர் சிஸ்டம் மூலம் மொபைல் டிவைசிலிருந்து ஆடியோவை ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது

இந்த இரு Haier C90 மற்றும் C95 OLED சீரிஸ்களிலும் ஒரே மாதுரியான அம்சங்கள் கொண்டுள்ளது, ஆனால் இதில் வித்தியாசம் என பார்த்தல் விலை தான், கூடுதலாக இதில் ஆடியோ மற்றும் கேமிங் அம்சம் கொண்டுள்ளது, C95 மாடலில் 2.1-சேனல் உடன் இதில் 50-வாட் சவுண்ட் சிஸ்டம் யின் Harman Kardon மற்றும் Dolby Atmos சப்போர்ட் மற்றும் dbx-tv audio கொண்டுள்ளது அதுவே இதன் C90 மாடல் யில் மிகவும் பவர்புல்லான 65-வாட் செட்டப் வழங்குகிறது

144Hz ரெப்ராஸ் ரேட் , AMD FreeSync பிரீமியம், மாறி ரெப்ராஸ் ரேட் (VRR) மற்றும் மென்மையான கேமிங் மற்றும் குறைக்கப்பட்ட கன்டென்ட் தாமதத்திற்காக ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) போன்ற அப்டேட் செய்யப்பட்ட அம்சங்களைச் சேர்ப்பதன் மூலம் கேமிங் பயனர்களை இலக்காகக் கொண்டுள்ளதாக ஹேயர் கூறுகிறார். C90 சீரிஸ் கேமிங்கிற்கும் ஏற்றதாக இருந்தாலும், இது சற்று குறைந்த 120Hz புதுப்பிப்பு வீதத்தை வழங்குகிறது என்று நிறுவனம் குறிப்பிடுகிறது.

இதையும் படிங்க:Hisence யின் பம்பர் ஆபர் 55 இன்ச் TV வாங்கினால் 100 இன்ச் டிவி FREE இதை எப்படி பெறுவது முழுசா பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo