PVC Aadhaar Card பெற உங்களின் ரெஜிஸ்ட்டர் மொபைல் நம்பர் அவசியமில்லை அது எப்படி பாருங்க
இப்பொழுது எந்த ஒரு ரெஜிஸ்ட்டர் மொபைல் நம்பர் இல்லாமல் PVC Aadhaar Card ஆர்டர் செய்யலாம் அதாவது PVC ஆதார் கார்ட் என்பது ATM வடிவில் இருக்கும் வாட்டார் ப்ரூப் உடன் உருவாக்கப்பட்டது, இதன் மூலம் உங்கள் ஆதர் கார்டை எளிதாக உங்களின் பர்சில் வைக்க முடியும், அதற்காக இதை வாங்க நீண்ட வரிசையில் நிற்க தேவை இல்லை உங்கள் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் பெறலாம் மேலும் இந்த கார்ட் தண்ணிரில் விழுந்தாலோ அல்லது கிளியும் என்ற பயம் தேவை இல்லை எனவே PVC Aadhaar Card பாடுகப்பனது நீங்கள் அது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க
Surveyரெஜிஸ்ட்டர் மொபைல் நம்பர் தேவை இல்லை
ரெஜிஸ்ட்டர் மொபைல் நம்பர் இல்லாமல் இப்போது PVC Aadhaar Card ஆர்டர் செய்யலாம் என்று UIDAI தனது அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து ட்வீட் செய்துள்ளது. உங்கள் மொபைல் எண் இணைக்கப்படாவிட்டாலும் அல்லது ஆதாருடன் பதிவு செய்யப்படாவிட்டாலும் கூட, உங்கள் PVC ஆதார் அட்டையை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் என்று அந்த ட்வீட் கூறுகிறது . UIDAI உங்களை வேறு மொபைல் நம்பர் பயன்படுத்த அனுமதிக்கிறது, இது ஒரு OTP ஐப் பெற்று PVC கார்டை ஆர்டர் செய்ய அதைச் சரிபார்க்கும்.
Did you know? You can order your #AadhaarPVCCard online even without an Aadhaar-registered mobile number.
— Aadhaar (@UIDAI) October 28, 2025
Simply use any alternate mobile number, verify with the OTP sent to that number, and get your Aadhaar #PVC Card delivered to your #Aadhaar-registered address.
To order your… pic.twitter.com/50AWkPkgVs
உங்கள் PVC கார்டை யார் வேண்டுமானாலும் ஆர்டர் செய்து தங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யலாம் என்று நீங்கள் நினைத்தால், அது உண்மையல்ல. PVC அட்டை எப்போதும் உங்கள் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு டெலிவரி செய்யப்படும் என்றும் அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொபைல் நம்பர் வேறுபட்டிருக்கலாம், ஆனால் முகவரி ஆதார் கார்டை போலவே இருக்கும்.
இதையும் படிங்க: Aadhaar Card New Rules: நவம்பர் 1 முதல் ஆதார் கார்டில் அந்த 3 முக்கிய விஷயத்தில் மாற்றம் அது என்ன பாருங்க?
இதை UIDAI-யின் அதிகாரப்பூர்வ வெப்சைட் , mAadhaar போர்டல் அல்லது மொபைல் செயலி மூலம் ஆர்டர் செய்யலாம். நீங்கள் ₹50 கட்டணம் செலுத்தினால் போதும், உங்கள் PVC ஆதார் கார்ட் உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும்.
UIDAI படி PVC ஆதார் கார்ட் எப்படி பெறுவது?
- ட்விட்டர் படி PVC ஆதார் கார்ட் பெற நீங்கள் mAadhaar போர்ட்டல் அதாவது https://myaadhaar.uidai.gov.in/genricPVC யில் செல்ல வேண்டும் அல்லது mAadhaar ஆப் டவுன்லோட் செய்யலாம்.
- ஆண்ட்ரோய்ட் பயனர்கள் Google Play store மற்றும் ஆப்பில் ஆப் ஸ்டோரில் சென்று இதை டவுன்லோட் செய்யலாம்.
- இப்பொழுது ஆப் அல்லது வெப்சைட் திறக்க மொபைல் நம்பர் போடா வேண்டி இருக்கும் அதன் பிறகு ஸ்க்ரீனில் வரும் கேப்ச்சா கொட போடா வேண்டும்.
- இப்பொழுது நீங்கள் My mobile number is not registered என்ற ஆப்ஷனில் க்ளிக் செய்ய வேண்டும்
- இப்பொழுது நீங்கள் எந்த மொபைல் நம்பர் மற்றும் OTP போட்டு வெரிபை செய்யவும்
- இப்பொழுது கட்டணம் செலுத்திய பிறகு PVC ஆதார் கார்ட் உங்களின் ஆதர் முகவரிபடயு வீட்டுக்கு வந்து சேரும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile