Madharasi: சிவகார்த்திகேயன் மதராஸி ரிலீசாகி ஒரு நாளில் பரபரப்பை ஏற்படுத்தி, OTT தகவல்கள் வெளியானது!

Madharasi: சிவகார்த்திகேயன் மதராஸி ரிலீசாகி ஒரு நாளில் பரபரப்பை ஏற்படுத்தி, OTT தகவல்கள் வெளியானது!

Madharasi: சிவகார்த்திகேயன் நடிபில் வெளியான மதராசி” திரைப்படம் செப்டம்பர் 5, 2025 இன்று திரையரங்குகளில் வெளியானது, மேலும் இப்படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியது மேலும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார் மேலும் இப்படம் ஒரு சஸ்பென்ஸ் & திரில்லர் ஆக்‌ஷன் திரைப்படமாகும் இப்டத்தீர்க்கு அனிரூத் இசையமைத்துள்ளார் இதை தவிர தற்பொழுது இதன் OTT தகவல் வெளியாகியுள்ளது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Madharasi மதராஸி ரிலீஸ்

நடிகர் சிவகார்த்திகேயன் அவரது அற்புதமான திறமையான நடிப்பால் அனைத்து வயது ரசிகர்களையும் கவர்கிறார் அதுபோல, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து அனிருத் இசையில் உருவாகியிருக்கும் ‘மதராஸி’ திரைப்படம் செப்டம்பர் 5 ஆன இன்று ரிலீஸ் ஆகியது இதில் ருக்மினி வசந்த் , வித்யுத் ஜம்வால் , பிஜூ மேனன் , விக்ராந்த் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இதற்க்கு முன்னதாக நடித்த அமரன் படம் சிவகார்த்திகேயன் -சாய்பல்லவி காம்பினேஷனில் செம்ம ஹிட் அதனை தொடர்ந்து தற்பொழுது வெளிவந்துள்ள மதராசி சிவகார்த்திகேயன் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ள படம் ஆகும் இதை தவிர இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலிசாகியது . அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார், சுதீப் இளமோன் ஒளிப்பதிவு செய்கிறார், ஏ. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கையாளுகிறார் அதனை தொடர்ந்து நிலையில் தற்பொழுது OTT தகவல் வெளியாகியது

மதராஸி OTT தகவல்

“நான்கு வார திரையரங்குகள் முடிந்த பிறகு மதராசி பிரைம் வீடியோவில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்திய படங்கள் வழக்கமாக நான்கு வாரங்களுக்குப் பிறகு OTT தளங்களில் வெளியிடப்படும், அதாவது படம் அக்டோபர் 2025 முதல் வாரத்தில் ஸ்ட்ரீமிங்கிற்குக் கிடைக்கும். சிவகார்த்திகேயனின் ரசிகர் பட்டாளத்திற்கு நன்றி, மதராசியின் டிஜிட்டல் உரிமைகளுக்காக Amazon Prime வீடியோ ரூ.40 கோடியை விற்றுள்ளது filmbeat தெரிவித்துள்ளது ஆனால் குறிப்பிட்ட தேதியை தெரிந்து கொள்ள சிறிது காத்திருப்பது அவசியாமாகும்.

மதராஸி கதை எப்படி

தமிழ்நாட்டிற்குள் ஒரு ஆபத்தான கும்பல் துப்பாக்கிகளைக் கடத்தி, பயத்தையும் குழப்பத்தையும் உருவாக்குகிறது. ஒரு நேர்மையான அதிகாரி அவர்களை வேட்டையாடத் தொடங்குகிறார். அதே நேரத்தில், ஒரு சாதாரண மனிதன் தனது காதலியை அந்தக் கும்பல் அழைத்துச் செல்லும்போது இந்தக் குற்ற உலகத்திற்குள் இழுக்கப்படுகிறான். அவளைக் காப்பாற்ற, அவன் எதிர்த்துப் போராடுகிறான், ஆனால் அவனது கலங்கிய மனம் அவனை வன்முறையில் தள்ளுகிறது. காவல்துறை நெருங்கி, அந்தக் கும்பல் கட்டுப்பாட்டை இறுக்கும்போது, ​​அவனது காதல் கதை ஒரு இருண்ட போராக மாறுகிறது, அங்கு அவன் ஒரு ஹீரோவா அல்லது வில்லனா என்று சொல்வது கடினம்.

மதராஸி ரிவ்யூ எப்படி

இயக்குனர் முருகதாஸின் ஸ்டைலில் காதல் ஆக்‌ஷன் என விறுவிறுப்பாக செல்கிறது முதல் பாதி. ஒரு சில காட்சிகள் வழக்கமாகவும் கிரிஞ்சாகவும் இருந்தாலும் கதை சுவாரஸ்யமாக அடுத்தகட்டத்திற்கு நகர்கிறது மேலும் twitter X பக்கத்தில் ரிவ்யூ பறக்குகிறது

இதையும் படிங்க:தனுஷ் தானே இயக்கி நடிக்கும் படம் எப்போ ரிலீஸ் இது தலைவன் தலைவிக்கு டஃப் கொடுக்குமா

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo