Tamil Nadu Election:PVC Voter ID கார்ட் எப்படி உருவாக்குவது மற்றும் அடுத்த ஆண்டு தேர்தல் பிடித்த தலைவரை தேர்ந்தெடுங்க

Tamil Nadu Election:PVC Voter ID கார்ட் எப்படி உருவாக்குவது மற்றும் அடுத்த ஆண்டு தேர்தல் பிடித்த தலைவரை தேர்ந்தெடுங்க

தமிழ்நாடு தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் -மே 2026 ஆம் ஆண்டு நடை பெற இருக்கிறது மேலும் நீங்கள் இன்னும் பழைய Voter ID card அல்லது Voter ID கார்ட் இல்லை என்றால் நீங்கள் வீட்டிருந்தபடி PVC வோட்டர் ID கார்ட் உருவாக்கி உங்களுக்கு பிடித்த தலைவரை தேர்ந்துக்கலாம். அது எப்படி செய்வது என்பதை முழுசா பார்பர்க்கலம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தமிழ்நாடு கட்சிகள்

தமிழ் நாட்டில் பல லீடிங் கட்சிகள் இருக்கிறது DMK, ADMK, நாம் தமிழர் கட்சி மேலும் தற்பொழுது TVK கட்சி தலைவராக தளபதி விஜய் களத்தில் இறங்கியுள்ளார் மேலும் இவர் புதிய TVK ஆப் மூலம் உறுப்பினர் சேர்ந்து வருகிறார் மேலும் இவரின் நடிப்பின் ரசிகராக பலர் இருந்தாலும் அரசியல் கட்சி தலைவராக எப்படி என்பதை 2026 என்பது தான் தெரியும் எனவே உங்களுக்கு பிடித்த தலைவரை தேர்ந்டுக்க ஒவ்வொரு இந்திய குடி மகனுக்கும் voter ID அவசியல் எனவே ATM சைஸில் கிடைக்கும் PVC voter id மற்றும் டிஜிட்டல் voter Id கார்ட் எப்படி டவுன்லோட் செய்வது என பார்க்கலாம் வாங்க.

PVC Voter ID Card அறிமுகம்

Election Commission of India (ECI) அதன் பயனர்களுக்கு PVC Voter ID Card உருவாக்கியுள்ளது , இது பார்க்க ATM கார்ட் போல தான் இருக்கும் மற்றும் இது ப்ளாஸ்டிக் பொருளை வைத்து செய்யப்பட்டது இதில் பார்க்க தனித்துவமாக இருக்கும் அதாவது இதில் புதிய முறையான செக்யூரிட்டி அம்சம் ஹெலோக்ரம் போன்ற அம்சம், மைக்ரோ டெக்ஸ்ட் மற்றும் QR கோட் போன்றவை அடங்கும்.

PVC கார்ட் நீடித்து உழைக்கக் கூடியது மட்டுமல்ல, அதை உங்கள் பாக்கெட்டிலோ அல்லது வாலேட்டில் எளிதாக வைத்திருக்க முடியும். இப்போது மக்கள் கிழிந்த அல்லது சேதமடைந்த வாக்காளர் அடையாள அட்டையைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. சிறப்பு என்னவென்றால், நீங்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம், தேர்தல் ஆணையம் அதை உங்கள் முகவரிக்கு அனுப்பும்.

இதையும் படிங்க:சாதாரண பீச்சர் போனில் UPI மூலம் பணம் எப்படி அனுப்புவது, உங்க வயதான அப்பா அம்மாக்கு இதை சொல்லி கொடுங்க

PVC voter card எப்படி உருவாக்குவது

  • முதலில் அதிகாரபூர்வ Election Commission of India Portal வெப்சைட் செல்லவேண்டும்
  • இப்போது முதலில் தேர்தல் ஆணையத்தின் இந்த வெப்சைட்டில் பதிவு செய்து https://www.elections.tn.gov.in/ உங்கள் அக்கவுன்ட் உருவாக்கவும். இதற்கு நீங்கள் உங்கள் ஈமெயில் ஐடி மற்றும் போன் நம்பர் பயன்படுத்த வேண்டும்.
  • பதிவுசெய்த பிறகு, உங்கள் அக்கவுண்டில் லாகின் செய்து , வசிப்பிடத்தை மாற்றுதல்/ஏற்கனவே உள்ள வாக்காளர் லிஸ்ட்டில் உள்ளீடுகளைத் திருத்துதல்/EPIC ஐ மாற்றுதல்/Pwd குறிப்பது என்ற விருப்பத்தின் கீழ் தோன்றும் படிவம் 8 ஐக் கிளிக் செய்யவும்.
  • இதற்குப் பிறகு, நீங்கள் யாருக்காக விண்ணப்பிக்கிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும். நீங்கள் உங்களுக்காக விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், சுயத்தைத் தேர்வுசெய்யவும்.
  • இதற்குப் பிறகு, உங்கள் EPIC நம்பரை உள்ளிடவும்.
  • இப்போது உங்களிடம் புதிய வோட்டர் கார்ட் வேண்டுமா அல்லது பழைய கார்டை மாற்ற விரும்புகிறீர்களா என்று கேட்கப்படும். இதில், திருத்தம் இல்லாமல் EPIC ஐ மாற்றுவதற்கான விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அடுத்த பக்கத்தில் உங்களைப் பற்றிய தகவல்களைக் காண்பீர்கள், இங்கே நீங்கள் Next என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இறுதியாக நீங்கள் ஏன் புதிய கார்ட் உருவாக்குகிறீர்கள் என்று கேட்கப்படும், எனவே இரண்டாவது விருப்பத்தை சொடுக்கவும். இதற்குப் பிறகு உங்கள் பாரம் சமர்ப்பிக்கப்படும், மேலும் உங்களுக்கு ஒரு சர்விஸ் ரெகுவஸ்ட் நம்பர் வழங்கப்படும்.

அதன் பிறகு உங்களின் புதிய PVC கார் 15-20 நாட்களுக்குள் வீடு தேடி வரும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo