Tamil OTT Movie: தமிழ் இந்த வாரம் சூப்பர் டாப் டக்கரு ரோமன்ஸ் மற்றும் காமெடி படம்

Tamil OTT Movie: தமிழ் இந்த வாரம் சூப்பர் டாப் டக்கரு ரோமன்ஸ் மற்றும் காமெடி படம்

இந்த வாரம் OTT யில் வரும் டாப் டக்கரு படங்கள் ஒவ்வொரு வாரமும் வார இறுதியில் விடுமுறையின் போது புதிய படங்களுக்காக காத்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் இந்த வாரம் பலரின் மனதை தொட்ட தலைவன் தலைவி மற்றும் மாரிசீசன் போன்ற படங்கள் வருகிறது உங்களுக்கு பிடித்த netflix,JioHotstar, amazon prime vedio போன்ற தளங்களில் பார்க்கலாம் இந்த தமிழ் OTT லிஸ்ட்டில் என்ன என்ன படங்கள் இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மாரிசீசன்

வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் என இரண்டு நடிகர் ஜாம்பவான் நடிப்பில் வெளிவந்த படம் ”மாரீசன்”. நகைச்சுவை, பரபரப்புடன் இருக்கும் இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் கதையினை வி. கிருஷ்ணா மூர்த்தி எழுத சுதீசு சங்கர் இயக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்தப் படம் ஆர். பி. சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்சு நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் தலைமையிலான நட்சத்திர நடிகர்கள் ஆகஸ்ட் 22 முதல் நெட்ஃபிளிக்ஸில் மாரீசன் திரைப்படம் வெளியாகிறது இத்திரைபடத்தை தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்தில் பார்க்கலாம் .

தலைவன் தலைவி

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் ஜூலை 25 அன்று 2025 தியேட்டரில் ரிலீஸ் ஆகியது, இதில் முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ரோமன்ஸ் கலந்த காமெடி திரைப்படம் ஆகும் மேலும் இந்த படம் திரையரங்குகளில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது அதனை தொடர்ந்து OTT ஸ்ட்ரீமிங் தளத்திற்கு தயார் ஆகியுள்ளது அதாவது நீங்கள் இந்த படத்தை ஆகஸ்ட் 22 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் இந்த படத்தை உங்களின் அன்பான பார்ட்னர் உடன் பார்க்கலாம்

இதையும் படிங்க:தலைவன் தலைவி OTT ரிலீஸ் தகவல் அப்டேட் எப்போ எங்கு வருது முழுசா பாருங்க

அஃகேனம்

கீர்த்தி பாண்டியன், அருண் பாண்டியன் மற்றும் ஆதித்யா ஷிவ்பிங்க் ஆகியோர் நடித்திருக்கும் திரில்லர் படமாகும். இந்த படம் நிஜ வாழ்க்கையின் தந்தை மகள் கூட்டணியின் இணைந்து நடித்திருக்கும் அழகிய படமாகும். இந்தப் படம் கீர்த்தி, அருண் பாண்டியன் மற்றும் ஆதித்யா ஷிவ்பிங்க் ஆகிய மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதையாகும். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் கோவிந்தராஜன், இசையமைப்பாளர் பரத் வீரராகவன், எடிட்டர் தேவத்யன், கலை இயக்குநர் ராஜா, ஸ்டண்ட் இயக்குநர் பிசி ஸ்டண்ட்ஸ் மற்றும் பிரபல ஒடிசி பயிற்றுவிப்பாளர் கங்காதர் நாயக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இசையமைத்தவர் பரத் வீரராகவன். ஆகஸ்ட் 15, 2025 முதல் அஃகேனம் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo