UPI யின் புதிய நாளை முதல் மாற்றம் மக்களே அது என்னனு தெருஞ்சிகொங்க
நெஷனல் பேமன்ட் கார்பொரேஷன் இந்தியா Google Pay, PayTM, போன் பே போன்ற UPI ஆப் யின் புதிய விதி மாற்றப்பட்டுள்ளது இந்த புதிய விதிமுறையானது ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் இதன் என்ன விதிமுறை என்பதை முழுசா பார்க்கலாம் வாங்க
Surveyபேலன்ஸ் செக் லிமிட் ஆக்கப்பட்டுள்ளது
NPCI யின் புதிய விதியின் படி ஒரு நாளைக்கு பல முறை UPI ஆப்பை பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு, இந்த விதிகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம் . ஒரு ஆப் யில் 50 முறை மட்டுமே பேலன்ஸ் வெரிபிகேஷன் செய்ய ம உடயும், ஆட்டோ பே கோரிக்கைகள், பேமண்ட் கேன்ஸில் மற்றும் லிங்க் செய்யப்பட்ட அக்கவுன்ட் வெரிபிகேஷன் போன்ற அம்சங்களுடன் இது தொடர்புடையது.
ஆட்டோ பேமன்ட்க்கு குறிப்பிட்ட நேரம் நிர்ணயக்கப்பட்டுள்ளது
UPI- யில் EMI-கள், SIP அல்லது OTT சப்ஸ்க்ரிப்ஷன் போன்ற தொடர்ச்சியான பேமன்ட் மற்றும் ஆட்டோ ட்ரேன்ஸ்செக்ஷன் காலை 10 மணிக்கு முன், பிற்பகல் 1-5 மணி மற்றும் இரவு 9:30 மணிக்குப் பிறகு மட்டுமே செயல்படுத்தப்படும். அதாவது உங்கள் பேமன்ட் காலை 11 மணிக்குள் செலுத்தப்பட வேண்டும் என்றால், அது முன்னதாகவோ அல்லது பின்னர் மட்டுமே இது கழிக்கப்படும். காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 9:30 மணி வரையிலான உச்ச நேரங்களில் கட்டணத்தைச் செயலாக்குவதைத் தவிர்க்க இது செய்யப்படுகிறது. மேலும், தானியங்கி கட்டண ஆணையைச் செயல்படுத்தும்போது, மீண்டும் முயற்சிகள் இருக்கும், அதன் பிறகு தானியங்கி கட்டணமும் கழிக்கப்படாமல் போகலாம்.
பேங்க் தகவலை பெற லிமிடெட் ஆகப்பட்டுள்ளது
நாளை முதல் கஸ்டமர்கள் பேங்கில் லிங்க் செய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து 25 முறை மட்டுமே பேங்க் தகவலை பெற முடியும். இந்த செயல்முரயனது கஸ்டமர்கள் UPI apps யில் வரும் தேர்டுக்கப்பட்ட பேங்கில் மட்டும் பொருந்தும்.
இதையும் படிங்க Google Pay, Paytm மற்றும் PhonePe கஸ்டமர்கள் புதிய ரூல் ஆகஸ்ட் 1 அதிரடி மாற்றம்
ட்ரேன்செக்சன் ஸ்டேட்டஸ்
பீக் ஹவர்களில் , பயனர்கள் பெரும்பாலும் பரிவர்த்தனைகள் தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர், அதாவது பணம் டெபிட் செய்யப்படுவது மற்றும் மறுபக்கம் அதைப் பெறாதது போன்றவை. இனிமேல், UPI செயலி நிலுவையில் உள்ள அல்லது செயலாக்கத்தைக் காண்பிப்பதற்குப் பதிலாக, பரிவர்த்தனையின் உண்மையான கட்டண நிலையை சில நொடிகளில் காட்ட வேண்டும். காசோலைகளுக்கு இடையில் 90 வினாடிகள் காத்திருப்புடன் நிலையைச் சரிபார்க்க பயனருக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே இருக்கும்.
பாதுகாப்பான பேங்க் அக்கவுன்ட் லிங்கிங்
ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒருவருக்கு UPI மூலம் பணம் அனுப்புவதன் மூலம் அவரின் பெயரை சரியாக சரிபார்ப்பது நல்லது இந்த கூடுதல் பாதுகாப்பு லேயர் மோசடி மற்றும் தவறான அக்கவுன்டிலிருந்து தற்செயலான இணைப்பைக் குறைக்க உதவும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile