Google Pay, Paytm மற்றும் PhonePe கஸ்டமர்கள் புதிய ரூல் ஆகஸ்ட் 1 அதிரடி மாற்றம்

Google Pay, Paytm மற்றும் PhonePe கஸ்டமர்கள் புதிய ரூல் ஆகஸ்ட் 1 அதிரடி மாற்றம்

இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அதன் UPI விதிகளை மாற்றியுள்ளது. இப்போது புதிய விதிகள் ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும். NPCI இன் படி, இந்தியாவில் டிஜிட்டல் ட்ரேன்செக்சன்களின் பாதுகாப்பு மற்றும் வேகத்தை மேம்படுத்த இந்த புதிய வழிகாட்டுதல்கள் செயல்படுத்தப்படுகின்றன. நீங்கள் Google Pay, Paytm, PhonePe அல்லது வேறு ஏதேனும் தளத்தை இயக்குகிறீர்கள் என்றால், இந்த மெசேஜ் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. செயல்படுத்தப்பட வேண்டிய இந்த புதிய விதிகள் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

UPI விதிகள் எவ்வாறு மாறும்?

  • UPI பயனர்கள் தங்கள் இணைக்கப்பட்ட பேங்க் அக்கவுண்ட்களை ஒரு நாளைக்கு 25 முறைக்கு மேல் சரிபார்க்க முடியாது.
  • UPI பயனர்கள் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே தங்கள் இருப்பைச் சரிபார்க்க முடியும்.
  • கட்டண கண்காணிப்பு விஷயத்தில், நீங்கள் ஒரு த்ரேன்செக்சன் யின் நிலையை 3 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். ஒவ்வொரு முயற்சிக்கும் இடையில் 90 வினாடிகள் இடைவெளி இருக்க வேண்டும்.
  • அமைப்பில் நெரிசலைக் குறைக்க, ஆட்டோ பே ட்ரேன்செக்சன் ஸ்டேண்டர்ட் டைம் இடைவெளிகளுடன் மேனேஜ் செய்யப்படும்.

இதையும் படிங்க: QR Code ஸ்கேன் செய்தலே Aadhaar உண்மையானதா போலியா அம்பலமாகிவிடும்

ஏப்ரல் மற்றும் மே 2025க்கு இடையில் தாமதங்கள் மற்றும் ட்ரேன்செக்சன் தோல்விகள் குறித்த புகார்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து NPCI இந்த மாற்றத்தைச் செய்துள்ளது. பயனர்கள் மீண்டும் மீண்டும் பேலன்ஸ் வெரிபிக்ஷன் மற்றும் மீண்டும் மீண்டும் நிலை கண்காணிப்பு காரணமாக கம்ப்யூட்டர் மெதுவாகச் செயல்படுவதாக NPCI தெரிவித்துள்ளது. இப்போது புதிய மாற்றங்கள் மற்றும் விதிகளுடன், ட்ரேன்செக்சன் வேகமாக இருக்கும், மேலும் தினசரி பயன்பாட்டில் எந்தப் பாதிப்பும் இருக்காது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo