Lava ProWatch Xtreme AMOLED டிஸ்ப்ளே உடன் அறிமுகம் தந்தையர் தினத்துக்கு இதை கொடுத்து அசத்துங்க
Lava அதன் Lava Prowatch Xtreme அறிமுகம் செய்தது, இது Prowatch X அட்வான்ஸ் வெர்சனாக இருக்கும். Prowatch Xtreme யில் ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் தரும், Lava Prowatch Xtreme யின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Lava Prowatch Xtreme விலை தகவல்.
Lava Prowatch Xtreme சிலிக்கன் யின் விலை ரூ, 4,499 ஆகும், ஆனால் இதை பேங்க் ஆபரின் கீழ் ரூ,3,999 யில் வாங்கலாம் அதாவது தேர்ந்டுக்கப்ட்ட பேங்கில் 1,000ரூபாய் பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது, அதே நேரத்தில், அமேசானில் நைலான் வகை ரூ.4,699, ஆனால் வெளியீட்டு நாள் விலை ரூ.4,199. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட்களுடன் இதற்கு ரூ.1,000 பேங்க் சலுகையும் உள்ளது. மேலும் உலோக வகை ரூ.4,999, ஆனால் வெளியீட்டு நாள் விலை ரூ.4,499. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட்களுடன் இதற்கு ரூ.1,000 பேங்க் சலுகை உள்ளது.
ஜூன் 16, 2025 முதல் இ-காமர்ஸ் தளமான அமேசானில் லாவா ப்ரோவாட்ச் எக்ஸ்ட்ரீம் பிரத்தியேகமாக விற்பனைக்குக் கிடைக்கும் . இந்த கடிகாரம் சிலிகான், நைலான் மற்றும் மெட்டல் ஸ்ட்ராப் வகைகளில் வருகிறது. நைலான் மற்றும் உலோக விருப்பங்களுடன் இலவச சிலிகான் ஸ்ட்ராப் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அறிமுக விலைகள் மற்றும் சலுகைகள் ஜூன் 16 வரை அல்லது ஸ்டாக் தீரும் வரை மட்டுமே செல்லுபடியாகும்.
Lava Prowatch Xtreme சிறப்பம்சம்
Lava Prowatch Xtreme ஸ்மார்ட்வாட்ச் 1.43-இன்ச் AMOLED ஸ்க்ரீன் ரேசளுசனுடன் இதில் 466 x 466 பிக்சல்ஸ் 326 PPI டென்சிட்டி, 500 nits ப்ரைட்னஸ் மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே இருக்கிறது, மேலும் இது கார்நிங்க கொரில்லா கிளாஸ் 3 ப்ரோடேக்சன் வழங்குகிறது, மேலும் இது அலுமியம் அலாய் பாடி குறைந்த இடையுடன் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்டுள்ளது.
மேலும் இது ATD3085C சிப்செட் மற்றும் Bluetooth 5.3 இது சப்போர்ட் காலிங், குயிக் ரிப்லை மெசேஜ் வழங்குகிறது மற்றும் 8–10 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் (5 மணி நேர காலிங், 17 மணி நேர GPS). ஹெல்த் அம்சங்களில் ஹார்ட் பீட் மற்றும் SpO₂ கண்காணிப்புக்கான HX3960 PPG சென்சார், VO₂ Max, HRV, ஸ்மார்ட் ஸ்லீப் ட்ரெக்கிங் , பாடி எனர்ஜி மானிட்டரிங் மற்றும் 110+ கேம் மோட்கள் ஆகியவை அடங்கும். இது இன்டலிஜன்ஸ் உடற்பயிற்சி அங்கீகாரம் மற்றும் ஆறு கட்டமைக்கப்பட்ட ஓட்டப் படிப்புகளையும் வழங்குகிறது.
இதையும் படிங்க Xiaomi அறிமுகம் செய்தது 3-டோர் ரெப்ரஜிரேட்டர் மொபைல் மூலம் கண்ட்ரோல் செய்யலாம்
எக்ஸ்ப்ளோரர் சூட் வெளிப்புற கண்காணிப்புக்காக ஒரு காற்றழுத்தமானி, உயரமானி, திசைகாட்டி மற்றும் AQI கண்காணிப்பைச் சேர்க்கிறது. 6-அச்சு G-சென்சார் துல்லியமான இயக்க கண்காணிப்பை செயல்படுத்துகிறது. கூகிள் ஃபிட் மற்றும் ஹெல்த் கனெக்ட் சப்போர்ட் சுகாதாரத் டேட்டக்கான மையப்படுத்தப்பட்ட அக்சஸ் வழங்குகிறது, அதே நேரத்தில் உற்பத்தித்திறன் கருவிகளில் நிகழ்வு நினைவூட்டல்கள், போமோடோரோ டைமர், எனது வாட்ச் & தொலைபேசியைக் கண்டுபிடி, உலக கடிகாரம் மற்றும் சைகை கட்டுப்பாடுகள் ஆகியவை அடங்கும். கடைசியாக, இது Android மற்றும் iOS சாதனங்களுடன் இணக்கமானது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile