Amazfit தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் Amazfit GTR Mini ஐ இந்திய சந்தையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாட்ச் 1.28 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, Amazfit GTR மினி சக்திவாய்ந்த அம்சங்கள், ஸ்டைலான மற்றும் பிரீமியம் தோற்றத்துடன் வருகிறது. இது 20 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்குகிறது மற்றும் 120 க்கும் மேற்பட்ட விளையாட்டு முறைகளை ஆதரிக்கிறது. Amazfit GTR Mini இன் விலை மற்றும் பிற அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்…
Survey
✅ Thank you for completing the survey!
விலை தகவல்.
இந்திய சந்தையில் புதிய அமேஸ்ஃபிட் GTR மினி மாடலின் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைத்தளத்தில் நடைபெறுகிறது. புதிய அமேஸ்ஃபிட் GTR மினி மாடல் மிட்நைட் பிளாக், மிஸ்டி பின்க் மற்றும் ஓசன் புளூ என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
Amazfit GTR சிறப்பம்சம்.
Amazfit மிட்-ரேன்ஜ் பிரிவில் களமிறங்கி இருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் காம்பேக்ட் டிசைன், வட்ட வடிவம் கொண்டிருக்கிறது. இத்துடன் 1.28 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, பேனல், HD ரெசல்யூஷன், வளைந்த கிளாஸ் பாதுகாப்பு உள்ளது.
ஸ்மார்ட்வாட்ச்-இன் வலதுபுறம் இருக்கும் வட்ட வடிவ டயல் கொண்டு மெனு மற்றும் இதர ஆப்ஷன்களை இயக்க முடியும். மிட்-ரேன்ஜ் மாடல் என்ற போதிலும், பிரீமியம் அனுபவத்தை வழங்கும் வகையில், இந்த ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபிரேம் கொண்டிருக்கிறது.
புதிய அமேஸ்ஃபிட் GTR மினி மாடல் முழுமையாக சார்ஜ் செய்து பேட்டரி சேவிங் மோடில் அதிகபட்சம் 20 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. வழக்கமான பயன்பாடுகளின் போது, இந்த ஸ்மார்ட்வாட்ச் அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேக்கப் வழங்கும். இத்துடன் 120-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இவைதவிர, ஹார்ட் ரேட் மாணிட்டரிங், ஸ்டிரெஸ் லெவல் மேப்பிங், SpO2 மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile