TCL யின் புதிய C6K, C6KS மற்றும் p சீரிஸ் TV அறிமுகம் இது 43 லிருந்து 98 இன்ச் சைஸ் இருக்கும்

TCL யின் புதிய C6K, C6KS மற்றும் p சீரிஸ் TV அறிமுகம் இது 43 லிருந்து 98 இன்ச் சைஸ் இருக்கும்

TCL இந்தியாவில் அதன் புதிய TV அறிமுகம் செய்தது, நிறுவனம் இதில் பல மாடல்கள் அறிவித்துள்ளது , இதில் C6K, C6KS மற்றும் QD Mini-LED டிவி ஆகியவை அடங்கும். P8K மற்றும் P7K மாடலின் QLED டிவி வடிவில் அறிமுகம் செய்துள்ளது.P6K மாடலின் 4K HDR TV வடிவில் அறிமுகம் செய்துள்ளது மேலும் இந்த டிவியின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

TCL C6K, C6KS Series TV அம்சம்

TCL C6K மற்றும் C6KS மாடல்களை நிறுவனம் QD Mini-LED கீழ் பயன்படுத்தத் முடியும். இந்த டிவி சாடிக் டிம்மிங் ஹை HDR பீக் ப்ரைட்னஸ் மற்றும் மிக சிறந்த கண்ட்ரோல் வழங்குகிறது மற்றும் இதில் சிறந்த கண்ட்ரோல் வழங்குகிறது இதனுடன் இதில் TCL யின் Halo Control Technology வைக்கப்பட்டுள்ளது, இது லைட் துல்லியமாகக் கட்டுப்படுத்துகிறது, ஹெலோ எபக்ட் குறைக்கிறது மற்றும் தெளிவான படங்களை உருவாக்குகிறது.

நிறுவனம் இந்த டிவியை மூன்று சைஸில் அறிமுகம் செய்தது அதில் 55, 65, மற்றும் 75 ஆகியவை ஆகும். இவை 93% DCI-P3 அல்ட்ரா வைட் கலர் காமுட் சப்போர்டை கொண்டுள்ளன. இந்த டிவி 144Hz நேட்டிவ் ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது . இதில் மேம்பட்ட AiPQ Pro ப்ரோசெசர் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

TCL P Series TV அம்சம்.

TCL நிறுவனம் P தொடரில் மூன்று மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. P6K மாடலைப் பற்றிப் பேசுகையில், இந்த டிவிகள் 43 அங்குலங்கள் முதல் 75 அங்குலம் வரையிலான அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. P7K டிவியில் 43 இன்ச் முதல் 75 இன்ச் வரையிலான சைஸில் வருகின்றன. அதே நேரத்தில், P8K மாடல் 55 இன்ச் முதல் 98 இன்ச் வரையிலான சைஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

P சீரிஸ் டிவியில் MEMC, HDR10+ மற்றும் AiPQ எஞ்சின் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளன. P8K மாடல் 2.1 ஹை-ஃபை சிஸ்டம், டால்பி அட்மாஸ், DTS Virtual:X ஆடியோ மற்றும் 144Hz நேட்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவற்றைக் கொண்ட Sound by ONKYO சப்போர்டுடன் வருகிறது. P7K யில் 120Hz ரெப்ராஸ் ரேட் கிடைக்கிறது.

நிறுவனத்தின் அனைத்து புதிய தொலைக்காட்சிகளும் கூகிள் டிவியுடன் இயங்குகின்றன. இவை வொயிஸ் கண்ட்ரோல் அம்சத்தையும் கொண்டுள்ளன. இந்த டிவி ஒரு நேர்த்தியான உலோக பெசல் டிசைனை கொண்டுள்ளது.

TCL யின் புதிய டிவி விலை மற்றும் விற்பனை

C6K ரூ.53,990 இல் தொடங்குகிறது, மேலும் C6KS ரூ.51,990 இல் தொடங்குகிறது. P தொடர் ரூ.28,990 இல் தொடங்குகிறது. இந்த டிவிக்கள் குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற முக்கிய சில்லறை விற்பனைக் கடைகள், ஆஃப்லைன் பிராண்ட் விற்பனை நிலையங்கள் மற்றும் Amazon.in மற்றும் Flipkart.com இல் ஆன்லைனில் கிடைக்கின்றன .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo