சாம்சங்கின் 4K UHD .டிவி மாடல்கள் அறிமுகம்…!

சாம்சங்கின்  4K UHD .டிவி மாடல்கள் அறிமுகம்…!
HIGHLIGHTS

சாம்சங் எலெக்ட்ரிகானிக்ஸ் நிறுவனத்தின் 2018 சீரிஸ் தி ஃபிரேம் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அப்டேட் செய்யப்பட அம்சங்கள்

சாம்சங் எலெக்ட்ரிகானிக்ஸ் நிறுவனத்தின் 2018 சீரிஸ் தி ஃபிரேம் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அப்டேட் செய்யப்பட அம்சங்கள், புதிய கஸ்டமைசேஷன் வசதிகள் மற்றும் 800-க்கும் அதிகமான கலை வடிவங்கள் புதிய ஃபிரேம் டிவி-க்களில் வழங்கப்பட்டுள்ளன. 

https://static.digit.in/default/1873f002b7ef0ba54320b0f21b5effbf600c31dd.jpeg

4K UHD  ஸ்கிரீன் மற்றும் HDR .10 பிளஸ் கொண்டிருப்பதோடு, பயனர்கள் தங்களின் wifi மற்றும் சாம்சங் அக்கவுன்ட் விவரங்களை மொபைல் போனில் இருந்து ப்ளூடூத் லோ எனெர்ஜி வழியாக எக்ஸ்சேன்ஜ் செய்யும் வசதியை வழங்குகிறது. 

https://static.digit.in/default/908a9fc1eb6f6a0c39530c47d3fe18e98a5227fe.jpeg

இத்துடன் சாம்சங்-இன் ஸ்மார்ட் ஹப் மெனு வழங்கப்பட்டு இருப்பதால், பல்வேறு ஸ்ட்ரீமிங் சேவைகள், கன்சோல்கள் மற்றும் நேரலை டிவி உள்ளிட்டவற்றை இயக்க வழி செய்கிறது. இத்துடன் யுனிவர்சல் கைடு டிவி பயன்படுத்துவோருக்கு ஏற்ப தகவல்களை வழங்கும்.

டிவி மாடல்களை பொருத்த வரை உலகின் அதிக கலை வடிவங்களை சாம்சங் ஆர்ட் ஸ்டோர் வழங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் சாம்சங் ஆர்ட் ஸ்டோரில் நியூ யார்க் டைம்ஸ்-இல் இருந்து 30 வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படங்களை சாம்சங் சேர்க்கப்பட்டது.

https://static.digit.in/default/f1eb1faafb94461dcff620a8e5cb3c0c868976d4.jpeg

இதன் மூலம் பயனர்கள் ஒவ்வொரு அறையின் சூழலுக்கு ஏற்ப பிரத்யேக படங்களை தி ஃபிரேமில் செட் செய்ய முடியும். இத்துடன் பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியும் இந்த டிவியில் சேர்க்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட யூசர் இன்டர்ஃபேஸ் மூலம் பயனர்கள் வசிக்கும் அறையின் நிறத்துக்கு ஏற்பட கேலரிக்களில் ஒன்றை தேர்வு செய்ய முடியும்.

டிவி பயன்படுத்தப்படாத நிலையில் மோஷன் மற்றும் பிரைட்னஸ் சென்சார்கள் தி ஃபிரேம்-ஐ டிவியில் இருந்து கலை வடிவமாக மாற்றி, ஸ்கிரீன் பிரைட்னஸ்-ஐ அறையில் உள்ள சூழலுக்கு ஏற்ப கச்சிதமாக மாற்றியமைக்கும்.

சாம்சங் நிறுவனத்தின் 2018 தி ஃபிரேம் டிவி மாடல்களின் முன்பதிவு சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் துவங்கியுள்ளது. அமெரிக்காவில் 55 இன்ச் வேரியன்ட் விலை 1999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,37,255) என்றும் 65 இன்ச் மாடல் விலை 2799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,92,185) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo