43 இன்ச் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்டிவி அறிமுகம்.

HIGHLIGHTS

நோக்கியா 43 இன்ச் டிவியில் கூகுள் அசிஸ்டண்ட், பில்ட்-இன் குரோம்காஸ்ட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூன் 8 ஆம் தேதி துவங்கும்

43 இன்ச் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்டிவி அறிமுகம்.

ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா  இணைந்து நோக்கியா பிராண்டு ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன. புதிய 43 இன்ச் டிவி இது இன்ஃபினிட்டி எட்ஜ் வியூவிங் அனுபவத்தை வழங்குகிறது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை மற்றும் விற்பனை 

இந்தியாவில் புதிய 43 இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ. 31,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூன் 8 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நோக்கியா 43 இன்ச் டிவி சிறப்பம்சங்கள்

– 43 இன்ச் 3840×2160 பிக்சல் டிஸ்ப்ளே, டால்பி விஷன், MEMC தொழில்நுட்பம், இன்டெலிஜண்ட் டிம்மிங்
– 1 ஜிகாஹெர்ட்ஸ் பியூர் எக்ஸ் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர்
– மாலி 450MP4 GPU
– 2.25 ஜிபி ரேம்
– 16 ஜிபி மெமரி
– ஆண்ட்ராய்டு டிவி 9.0
– வைபை, ப்ளூடூத் 5
– 3xHDMI, 1xUSB 2.0, 1xUSB 3.0, ஈத்தர்நெட்
– 24 வாட் ஸ்பீக்கர்கள்
– ஜெபிஎல் சவுண்ட், டால்பி ஆடியோ, டிடிஎஸ் ட்ரூசரவுண்ட்

இது இன்ஃபினிட்டி எட்ஜ் வியூவிங் அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் MEMC தொழில்நுட்பம், இன்டெலிஜண்ட் டிம்மிங், வைடு கலர் கமுட் மற்றும் டால்பி விஷன் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. புதிய டிவியில் பில்ட்-இன் 24 வாட் ஸ்பீக்கர்கள் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட், டால்பி ஆடியோ மற்றும் ஜெபிஎல் ஆடியோ ஆப்டிமைசேஷன் வசதிகளை கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம் கொண்டிருக்கும் நோக்கியா 43 இன்ச் டிவியில் கூகுள் அசிஸ்டண்ட், பில்ட்-இன் குரோம்காஸ்ட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை டவுன்லோடு செய்ய முடியும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo