Hisense யின் A7Q QLED TV அறிமுகம் மேலும் இது Vidaa OS U9 சப்போர்டுடன் வரும் பெஸ்ட் டிவி ஆகும்
Hisense யூரோப்பில் அதன் Hisense A7Q QLED TV ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்தது. இது ஒரு 4K LCD பட்ஜெட் டிவி ஆகும். மேலும் இந்த வரிசையின் கீழ் 50, 55, 65 மற்றும் 75 இன்ச் ஆகியவை அடங்கும், மேலும் இந்த டிவி ஒரு 60Hz ரெப்ரஸ் ரேட்டுடன் 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது, மேலும் இந்த டிவி Vidaa OS U9 யில் வேலை செய்கிறது, மேலும் Hisense A7Q QLED TV யின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyHisense A7Q QLED TV சிறப்பம்சம்
Hisense A7Q QLED TV 50, 55, 65, மற்றும் 75 இன்ச் உடன் இது 4K LCD TV பட்ஜெட் டிவி ஆகும்,மேலும் A7Q யின் இந்த டிவியில் VA பேணல் உடன் நேரடியான LED பேக்லைட் கொண்டுள்ளது மேலும் இதில் 3,800 காண்ட்ராஸ்ட் ரேசியோ உடன் இதில் 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது இதனுடன் இது HDR10+, மற்றும் Filmmaker Mode உடன் இது Dolby Vision சப்போர்ட் உடன் வருகிறது மேலும் குவாண்டம் டாட் டெக்னாலாஜி உடன் மேலும் இது 4K AI அப் ஸ்கேலிங் தெளிவான ரெசளுசன் மற்றும் அம்பியன்ட் லைட் சென்சார் உங்கள் ரூமின் லைட்டுக்கு ஏற்ற ப்ரைட்னஸ் அட்ஜஸ்ட் செய்யலாம்.
மேலும் இந்த டிவி 60Hz மற்றும் கேம் மோட் உடன் இதில் VRR மற்றும் ALLM சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இதில் கேம் பாரில் குயிக் அக்சஸ் செட்டிங் வழங்குகிறது, மேலும் இதில் AI மோசன் இருப்பதால் பாஸ்ட்டன சீனிலும் ப்ளர் ஆகாமல் தெளிவான ஸ்க்ரீன் வழங்கும். மேலும் இது Vidaa OS U9 யில் இயங்கும், இதை தவிர இது ஸ்ட்ரீமிங் ஆப்ஸ் சப்போர்ட் மற்றும் அலக்ஸா வொயிஸ் கண்ட்ரோல், Vidaa Voice மற்றும் Apple Home ஆகிய சப்போர்ட் வழங்கும் இதனுடன் இதில் AirPlay 2 iOS ஆகியவை கொண்டுள்ளது. மேலும் இது built-in 2.0-channel ஸ்பீக்கர் உடன் Dolby Atmos சப்போர்ட் வழங்குகிறது.
இந்த டிவிக்கள் மூன்று HDMI 2.0 போர்ட்கள், இரண்டு USB 2.0 போர்ட்கள், ஒரு LAN போர்ட், ஒரு 3.5mm AV உள்ளீடு, ஒரு ஆப்டிகல் ஆடியோ வெளியீடு, ஒரு ஹெட்ஃபோன் ஜாக், ஒரு CI+ ஸ்லாட், ஒரு செயற்கைக்கோள் உள்ளீடு மற்றும் ஒரு RF ஆண்டெனா உள்ளீடு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. வயர்லெஸ் இணைப்பிற்கு, அவை புளூடூத் 5.0 மற்றும் Wi-Fi 5 (802.11ac) ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது .
Hisense A7Q QLED TV விலை தகவல்
Hisense A7Q QLED TV யின் விலையை பற்றி பேசினால், விலை 50 இன்ச் மாடலுக்கு €569 (தோராயமாக ரூ. 54,264), 55 அங்குல மாடலுக்கு €629 (தோராயமாக ரூ. 59,987), 65 அங்குல மாடலுக்கு €829 (தோராயமாக ரூ. 79,060) மற்றும் 75 அங்குல மாடலுக்கு €1,169 (தோராயமாக ரூ. 1,11,450) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவியை Hisense யின் Amazon Spain ஸ்டோரில் ப்ரீ ஆர்டருக்குக் கிடைக்கும், மேலும் ஜூன் 30 அன்று ஸ்பெயினில் Amazon வழியாகக் கிடைக்கும் .
இதையும் படிங்க:Lumio யின் புதிய டிவி இந்த தேதியில் அறிமுகமாகும் இதன் அம்சம் எப்படி இருக்கும் பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile