200MP மெயின் கேமரா உடன் Samsung Galaxy S26 Ultra அறிமுகம் இம்முறை சிறப்பான சம்பவம் இருக்கு
Samsung இன்று அதன் Galaxy Unpacked 2026 நிகழ்வில் Samsung Galaxy S26 Series போனை அறிமுகம் செய்தது
Samsung Galaxy S26 Ultra போனில் இருக்கும் சுவாரஸ்ய அம்சங்களையும் பார்க்கலாம்
இந்த போனில் பின்புறத்தில் கேமரா வழங்கப்படுகிறது அதில் அதிகபட்சமாக 200 MP மெயின் வைட் கேமரா வழங்கப்படுகிறது
Samsung இன்று அதன் Galaxy Unpacked 2026 நிகழ்வில் Samsung Galaxy S26 Series போனை அறிமுகம் செய்தது இந்த சீரிஸின் கீழ் Galaxy S26, Galaxy S26+ மற்றும் Galaxy S26 Ultra ஆகிய போன்கள் அடங்கும் ஆனால் நாம் இந்த Samsung Galaxy S26 Ultra போனில் இருக்கும் சுவாரஸ்ய அம்சங்களையும் பார்க்கலாம் இந்த போனில் பின்புறத்தில் கேமரா வழங்கப்படுகிறது அதில் அதிகபட்சமாக 200 MP மெயின் வைட் கேமரா வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் முழு அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveySamsung Galaxy S26 Ultra யின் டாப் அம்சங்கள்
டிஸ்ப்ளே மற்றும் டிசைன் :-Samsung Galaxy S26 Ultra போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.9-இன்ச் கொண்ட QHD+ Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது, மேலும் இந்த போனில் Vision Booster மேலும் இந்த போனில் உலகின் முதல் முறையாக பிக்சல் ப்ரைவசி கண்ட்ரோல் வழங்கப்படுகிறது, டிசைனை பொறுத்தவரை இந்த போன் ஸ்ளிம்மஸ்ட் அல்ட்ரா டிசைன் உடன் வருகிறது.
செக்யூரிட்டி மற்றும் ப்ரிவசி அம்சம்
Samsung Galaxy S26 Ultra யில் புதிய Privacy Display அம்சங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ளது இது சைட் என்கிலிருந்து ஸ்க்ரீன் விசிபிளிட்டி குறைக்கிறது, இதன் மூலம் பொது இடங்களின் உங்களின் டேட்டாவை பல மடங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்.பயணம் செய்யும் போது அல்லது அலுவலகத்தில் அருகில் நிற்கும் எவருக்கும் தங்கள் தொலைபேசியில் பார்க்கும் எந்த தகவலையும் காண்பிப்பதைத் தவிர்க்க விரும்பும் பயனர்களுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எளிமையான வார்த்தைகளில் கூறுவதானால், இந்த டிஸ்ப்ளே அம்சம் உங்கள் ஸ்க்ரீனில் நீங்கள் பார்க்கும் எந்தவொரு கன்டென்ட் உங்களுக்கு அருகில் நிற்கும் எவரும் எட்டாமல் பாதுகாக்கிறது.
ப்ரோசெசர் :-இதன் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இந்த போனில் Snapdragon® 8 Elite Gen 5 ப்ரோசெசருடன் Android 16 அடிபடையின் கீழ் இந்த போன் One UI 8.5 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது இதனுடன் இந்த போனில் அட்வான்ஸ்ட் Galaxy AI அம்சங்கள் கொண்டுள்ளது (Now Nudge, Now Brief, மேம்படுத்தப்பட்ட Bixby, Circle to Search) போன்ற சாப்ட்வேர் அம்சங்கள் நிறைந்துள்ளது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜ் :-16GB RAM + 1TB ஸ்டோரேஜ், 12GB RAM + 512GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது
கேமரா:- Samsung Galaxy S26 Ultra போனில் குவாட் கேமரா உடன் இதில் மெயின் 200MP வைட் கேமரா உடன் (F1.4, 2x ஒப்டிகள் குவாலிட்டி ஜூம் ),செகண்ட்ரியாக 50MP அல்ட்ரா வைட் கேமரா (F1.9) அப்ரட்ஜர், 50MP டெலிபோட்டோ லென்ஸ் கொண்ட (5x ஆப்டிகல் ஜூம் , 10x ஆப்டிகல் குவாலிட்டி ஜூம் zoom, F2.9) அப்ரட்ஜர் கொண்டுள்ளது மற்றும் 10MP டெலிபோட்டோ (3x optical zoom, F2.4) அப்ரட்ஜர் கொண்டுள்ளது மேலும் இதன் முன் பக்கத்தில் 12MP செல்ஃபி கேமரா உடன் (F2.2) அப்ரட்ஜர் கொண்டுள்ளது
புதிய கேலக்ஸி AI அம்சங்கள் போட்டோ ப்ரோசெசிங் , இரவு போட்டோ எடுத்தல் மற்றும் வீடியோ நிலைத்தன்மையை மேலும் மேம்படுத்துகின்றன. ஒட்டுமொத்தமாக, இந்த போனின் கேமரா மிகச்சிறந்தது.
பேட்டரி:- பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5,000 mAh பேட்டரியுடன் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் 3.0 உடன் இதில் 60W அடாப்டர் வழங்கப்படுகிறது மேலும் இதில் வயர்லஸ் பவர் ஷேரிங் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க போன வாரம் மார்க்கெட்டுக்கு வந்த Infinix புதிய போனின் இன்று முதல் விற்பனை
கனெக்டிவிட்டி :-இந்த போனில் கனேக்டிவிட்டிக்கு 5G, LTE, Wi-Fi 7, Bluetooth 6.0, Wi-Fi Direct போன்றவை வழங்கப்படுகிறது இதனுடன் இதன் டைமென்ஷன் 163.6 × 78.1 × 7.9 mm மற்றும் இதன் இடை 214g இருக்கிறது மேலும் இது வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் IP68 ரேட்டிங் வழங்கப்படுகிறது.
கலர் ஆப்ஷன்
Samsung Galaxy S26 Ultra ஸ்மார்ட்போனை Cobalt Violet, White, Black மற்றும் Sky Blue தவிர ஆன்லைன் எக்ஸ்க்ளுசிவ் Pink Gold மற்றும் Silver Shadow ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு, இந்த போனை இன்று முதல் முன்பதிவு செய்யலாம். பிப்ரவரி 25 முதல் இந்த போன் முன்பதிவுக்குக் கிடைக்கிறது. விருப்பங்களும் கிடைக்கும். இந்தியாவில் Samsung Galaxy S26 Ultra விலை மற்றும் அது எப்போது விற்பனைக்கு வரும் என்பதைக் கண்டுபிடிப்போம்.
Samsung Galaxy S26 Ultra விலை தகவல்
12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்: ரூ,. 1,39,999
12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ்: ரூ,. 1,59,999
16GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் : ரூ,. 1,89,999
பிப்ரவரி 25 முதல் இந்தியாவில் Samsung Galaxy S26 Ultra-விற்கான முன்கூட்டிய ஆர்டர்களைத் திறந்துள்ளது. வாடிக்கையாளர்கள் சேமிப்பக மேம்படுத்தல் மற்றும் ரூ.2,699 மதிப்புள்ள சலுகைகள் மற்றும் ரூ.65,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் மதிப்புடன் பெறலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile