மியூசிக் பிரியர்களுக்காக Galaxy Buds4 Pro மற்றும் Galaxy Buds4 அறிமுகம்,இதில் AI அம்சங்கள் இருக்கும்

HIGHLIGHTS

Samsung Galaxy S26 மட்டுமின்றி உலகளவில் அறிமுகம் செய்தது

புதிய வயர்லெஸ் இயர்பட்களான Galaxy Buds4 Pro மற்றும் Galaxy Buds4 ஆகியவற்றையும் அறிமுகம் செய்தது

புதிய மாடல்களில் மேம்படுத்தப்பட்ட பொருத்தம்

மியூசிக் பிரியர்களுக்காக Galaxy Buds4 Pro மற்றும் Galaxy Buds4 அறிமுகம்,இதில் AI அம்சங்கள் இருக்கும்

Samsung யின் இந்த ஆண்டின் மிக பெரிய நிகழ்வான Galaxy Unpacked 2026 அதன் லேட்டஸ்ட் Samsung Galaxy S26 இந்தியா மட்டுமின்றி உலகளவில் அறிமுகம் செய்தது புதிய போன்களுடன், நிறுவனம் பல புதிய அற்புதமான AI அம்சங்களையும் அதன் புதிய வயர்லெஸ் இயர்பட்களான Galaxy Buds4 Pro மற்றும் Galaxy Buds4 ஆகியவற்றையும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.புதிய Buds4 தொடர், பிரீமியம் ஹை-ஃபை ஆடியோவுடன் நாள் முழுவதும் வசதியான கேட்கும் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. புதிய மாடல்களில் மேம்படுத்தப்பட்ட பொருத்தம், மேம்படுத்தப்பட்ட ஆக்டிவ் நோய்ஸ் கேன்சிலேஷன் (ANC) மற்றும் AI- அடிப்படையிலான ஆடியோ சரிசெய்தல் ஆகியவை உள்ளன, இது பல்வேறு சூழல்களிலும் சீரான மற்றும் தெளிவான சவுண்ட் வழங்குகிறது. இந்த புதிய இயர்பட்களைப் பற்றிவிலை அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய டிசைன் மற்றும் மிக சிறந்த கம்பர்ட்

Samsung Galaxy Buds4 சீரிஸ் Samsung இன் “Blade Design” உள்ளது, இது மில்லியன் கணக்கான காது வடிவ தரவு மற்றும் ஆயிரக்கணக்கான உருவகப்படுத்துதல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. சிறிய மற்றும் பணிச்சூழலியல் இயர்பட் ஹெட்கள் நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் வசதியாக இருக்கும். ஒரு புதிய பின்ச் கட்டுப்பாட்டு பகுதி பயனர்கள் இசை அல்லது அமைப்புகளை எளிதாகக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. ஒரு வெளிப்படையான கிளாம்ஷெல் கேஸ் சேர்க்கப்பட்டுள்ளது, இது சார்ஜிங் மற்றும் ஸ்டோரேஜ் ஒரு சிறந்த அனுபவமாக மாற்றுகிறது.

Galaxy Buds4 Pro சிறப்பம்சம்

பட்ஸ்4 ப்ரோ ஒரு கெனால்-பிட் டிசைன் கொண்டுள்ளது, இது டீப் மற்றும் மிகவும் ஆழமான சவுண்ட் அனுபவத்திற்கு சிறந்த முத்திரையை உருவாக்குகிறது. இது ஒரு புதிய, பெரிய வூஃபரையும் கொண்டுள்ளது, இது வலுவான பாஸ் மற்றும் மிகவும் தெளிவான சவுண்ட் வழங்குகிறது. இந்த மாடல் 24-பிட்/96kHz உயர் ரேசளுசன் கொண்ட ஆடியோவை சப்போர்ட் செய்கிறது , மேலும் மேம்படுத்தப்பட்ட ANC தெளிவான ஆடியோவிற்கான சுற்றுப்புற இரைச்சலைக் குறைக்கிறது. காலின்கிற்க்கு , இது ஒரு சூப்பர் கிளியர் கால் அம்சத்தைக் கொண்டுள்ளது, பெக்ரன்ட் சத்தம் அதிகம் இருந்தால் கூட தெளிவான சவுண்டை உறுதி செய்கிறது.

Galaxy Buds4 சிறப்பம்சம்

கேலக்ஸி பட்ஸ்4 ஓபன் -பிட் டிசைனை கொண்டுள்ளது, இது இடைவரனாதகவும் மற்றும் இயற்கையாகவே லிசனிங் அனுபவத்தை விரும்பும் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை அடாப்டிவ் EQ மற்றும் ANC தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளன, இது பயனரின் காதுகள் மற்றும் சுற்றியுள்ள சூழலின் அடிப்படையில் தானாகவே சவுண்டை சரிசெய்கிறது. அவை அன்றாட பயன்பாடு, கால்கள் மற்றும் ம்யூசிக் மிகவும் வசதியான விருப்பமாகக் கருதப்படுகின்றன.

இதையும் படிங்க புதுசா அறிமுகமான Samsung Galaxy S26 மற்றும் Galaxy S26+ அம்சங்கள் மற்றும் விலை பற்றி பாருங்க

AI மற்றும் Galaxy எகொசிஸ்டம் இன்டிக்றேஷன்

புதிய Buds4 தொடரில் வலுப்படுத்தப்பட்ட AI ஒருங்கிணைப்பும் உள்ளது. பயனர்கள் தொலைபேசியைத் தொடாமலேயே குரல் கட்டளைகள் மூலம் Bixby, Google Gemini மற்றும் Perplexity போன்ற AI முகவர்களை அணுகலாம். எளிதான இணைத்தல், கேஸ் திறந்தவுடன் இயர்பட்களை Galaxy சாதனங்களுடன் இணைக்க அனுமதிக்கிறது, மேலும் Quick Panel யில் இருந்து EQ மற்றும் சவுண்டை கண்ட்ரோல் கிடைக்கின்றன.

Buds4 சீரிஸ் விலை மற்றும் விற்பனை.

புதிய Galaxy S26 தொடருடன் புதிய Buds4 தொடரும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் முன்கூட்டிய ஆர்டர்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளன, மார்ச் 11 முதல் கிடைக்கும். இதன் ஆரம்ப விலை Galaxy Buds 4: ரூ,. 16,999 ஆகும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo