Haier யின் வேற லெவல் TV அறிமுகம் Google Gemini உடன் பல அசத்தும் அம்சங்கள்
Haier இந்திய சந்தையில் Haier HQLED P7 Pro Series TVஅறிமுகம் செய்தது,
இந்த டிவியில் 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75-இன்ச் வரிசையின் கீழ் வருகிறது
இந்த டிவி HQLED டிஸ்ப்ளே உடன் வருகிறது.,
Haier இந்திய சந்தையில் Haier HQLED P7 Pro Series TVஅறிமுகம் செய்தது, இந்த டிவியில் 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75-இன்ச் வரிசையின் கீழ் HQLED டிஸ்ப்ளே உடன் வருகிறது., இந்த டிவியில் USB, Gemini AI சப்போர்ட் மற்றும் 50W யின் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த டிவியில் Google TV போன்ற பல சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த டிவியில் இருக்கும் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
SurveyHaier HQLED P7 Pro Series விலை தகவல்.
Haier HQLED P7 ப்ரோ சீரிஸ், 43-இன்ச் மாடலுக்கு ரூ,35,990, 50-இன்ச் மாடலுக்கு ரூ,43,490, 55-இன்ச் மாடலுக்கு ரூ,49,990, 65-இன்ச் மாடலுக்கு ரூ,67,990 மற்றும் 75-இன்ச் மாடலுக்கு ரூ,90,990 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிவி வரிசை இந்திய சந்தையில் உள்ள அனைத்து ரீடைளர் விற்பனைக் கடைகளிலும் கிடைக்கிறது.
Haier HQLED P7 Pro Series யின் மிக சிறந்த அம்சங்கள்.
HQLED டிஸ்ப்ளே மற்றும் AI பிக்ஜர் குவாலிட்டி
டிஸ்ப்லேகளை பொறுத்தவரை, இது ஈர்க்கக்கூடிய HQLED டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. 93% DCI-P3 கலர் கேமட் (color gamut) வசதியுடன் வருவதால், இதில் ஒவ்வொரு நிறமும் மிகவும் இயல்பானதாகவும் துடிப்பானதாகவும் காட்சியளிக்கிறது. இந்தத் தொலைக்காட்சியில் Dolby Vision, HDR10+ மற்றும் சிறப்பான ‘AI Picture Quality’ தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த டிவியில் AI HDR Enhancer மற்றும் AI Colour Boost இது ஒவ்வொரு சீன் ரியல் டைம் ஸ்கேன் செய்து, ப்ரைட்னஸ் , கான்ட்ராஸ்ட் மற்றும் மோஷன் ஆகியவற்றை உகந்த லெவல் தானாகவே சரிசெய்கிறது.
பர்போமான்ஸ் மற்றும் டிசைன்
இந்த ஸ்மார்ட் டிவி சீரிஸ், சீரான செயல்பாட்டிற்காக 2GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, எனவே உங்களுக்குப் பிடித்தமான ப்ரோசெசர்களையும் கேம்களையும் எந்தச் சிரமமும் இன்றி டவுன்லோட் செய்துகொள்ளலாம். தோற்றத்தைப் பொறுத்தவரை, இது மிக மெல்லிய பெசல்களுடன் கூடிய ஒரு பிரீமியம் நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது உங்கள் வீட்டின் உட்புற அலங்காரத்திற்கு ஒரு கச்சிதமான தேர்வாக அமைகிறது. மேலும், இது கண் பாதுகாப்பிற்காக TÜV ரைன்லேண்ட்-சான்றளிக்கப்பட்ட (Low Blue Light) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
Google Gemini AI யின் மிக சிறந்த அம்சம்
ஹையர் பி7 ப்ரோ தொடரின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் கூகுள் டிவி பிளாட்ஃபார்ம் ஆகும், இதில் கூகுளின் மிகவும் அப்டேட் செய்யப்பட்ட ஆர்த்பிசியல் இன்டலிஜன்ஸ் “AI ‘Gemini’ இன் பில்ட் செய்யப்பட்டுள்ளது.. இது, கைகள் பயன்படுத்தத் தேவையில்லாத வொயிஸ் கமன்ட் பயன்படுத்தி, உங்கள் வொயிஸில் மட்டுமே டிவியைக் கட்டுப்படுத்த உங்களை அனுமதிக்கிறது. ஜெமினியின் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் மிகவும் புத்திசாலித்தனமானது, அது உங்கள் விருப்பங்களைப் புரிந்துகொண்டு தானாகவே பரிந்துரைகளை வழங்குகிறது. இது பெரிய திரையில் உரை, வீடியோ மற்றும் காட்சிகளைத் தடையின்றி ஒருங்கிணைத்து, உங்கள் தேடலை எளிதாக்குகிறது.
சவுண்ட் எபக்ட்
இந்த டிவி, சினிமா எபக்ட் போன்ற சவுண்ட் அனுபவத்திற்காக 50W 2.1-சேனல் ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது. பெரிய மாடல்களில் (55-இன்ச் மற்றும் அதற்கு மேற்பட்டவை) ஒருங்கிணைந்த சப்வூஃபரும் இடம்பெற்றுள்ளது, இது டீப் பேஸ் மற்றும் மிகத் தெளிவான சவுண்டை உருவாக்குகிறது. மேலும், இது Dolby Atmos மற்றும் டோட்டல் சோனிக்ஸ்® ஆடியோ தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்கிறது., உங்கள் ரூம் முழுவதையும் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் உடன் நிரப்புகிறது.
இதையும் படிங்க போட்டன் பாரு ஒரே போடு Sony யின் 75 இன்ச் சைஸ் TV பாதிக்கு பாதி டிஸ்கவுண்ட் ஆபர்
கேமர்களுக்கு சிறப்பக வடிவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய இளைஞர்களை மனதில் கொண்டு, ஹையர் இந்த டிவியில் மேம்பட்ட கேமிங் அம்சங்களை வழங்கியுள்ளது. இது கேமிங் 120Hz (DLG), MEMC, VRR (வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட்) மற்றும் ALLM (ஆட்டோ லோ லேட்டன்சி மோடு) ஆகியவற்றை ஆதரிக்கிறது. இதில் உள்ள பிரத்யேக “கேமிங் பார்”, கேம் விளையாடும்போது அமைப்புகளை விரைவாக மாற்ற உதவுகிறது, இதன்மூலம் எந்தவித தாமதமோ அல்லது தடங்கலோ இன்றி தடையற்ற கேம் கேம் பெறலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
