Vodafone idea குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி கொண்ட 2 வொயிஸ் காலிங் திட்டம் அறிமுகம்
மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Vodafone Idea குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, ஆனால் இந்த திட்டத்தில் நன்மை என பார்த்தல் அது காலிங் மற்றும் SMSக்கு மட்டும் பயன்படுத்த முடியும் அந்த வகையில் இப்பொழுது vodafone idea அதன் கஸ்டமர்களுக்கு ரூ,470 யில் 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ரூ,1849 திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது மேலும் இதன் நன்மை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
SurveyVi யின் ரூ 470 திட்டம்
குறைந்த விலையில் 84 நாட்கள் வேலிடிட்டியை நீங்கள் விரும்பினால், வோடபோன் ஐடியாவின் ரூ.470 திட்டம் சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தின் கீழ், அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் காலிங் வசதி கிடைக்கிறது. கூடுதலாக, முழு வேலிடிட்டி காலத்திலும் 900 SMS அனுப்பும் விருப்பமும் உள்ளது. இந்த திட்டம் குறைந்த பட்ஜெட் கஸ்டமர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Vi யின் ரூ.1849 திட்டம்
நீங்கள் முழு ஆண்டு வேலிடிட்டியை விரும்பினால், வோடபோன் ஐடியாவின் ரூ.1849 திட்டம் ஒரு நல்ல வழி. இந்த திட்டத்தில், அனைத்து நெட்வொர்க்குகளிலும் 365 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங் வசதி கிடைக்கும். இதனுடன், முழு வேலிடிட்டி காலத்திலும் 3600 SMS அனுப்பும் விருப்பமும் வழங்கப்படுகிறது. நீண்ட காலத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்து 1 ஆண்டு வரை ரீச்சார்ஜ் தொல்லையிலிருந்து விடுபெறலாம்.
இந்த திட்டத்தில் நன்மை.
இந்த திட்டமானது நீண்ட நாள் வரை வேலிடிட்டி பெற விரும்புவோர்களுக்கு இந்த திட்டம் சிறப்பனதாக இருக்கும் அதாவது நீங்கள் உங்கள் போனில் செகண்டரி சிம் பயன்படுத்தி வந்தால் அவர்களின் சிம் நீண்ட நாட்கள் வரை ரீசார்ஜ் தொல்லையிலிருந்து விடுபெற நினைத்தால் இந்த திட்டம் சிறப்பனதாக இருக்கும்.
Vodafone Idea ரூ, 1,460 ப்ரீபெய்ட் திட்டம்.
Vodafone Idea (Vi) ₹1,460 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS உடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 270 நாட்கள்.இருப்பினும், இது 365 நாட்கள் வருடாந்திர திட்டத்தை விட 95 நாட்கள் குறைவாக உள்ளது மற்றும் கூடுதல் நன்மைகள் எதுவும் இல்லை. வொயிஸ் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு மட்டும் 9 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை நீங்கள் விரும்பினால், Vi யின் இந்த புதிய திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

இதையும் படிங்க:Vodafone Idea அறிமுகம் செய்தது வொயிஸ் காலிங் திட்டம் இதில் என்ன நன்மை கிடைக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile