திடிர் என முழித்து கொண்டVI நம்ம சென்னை மாநகரத்துக்கு 5G சேவை அறிமுகம்
Vodafone Idea (VI), தனது சென்னை கஸ்டமர்களுக்காக அதன் 5G சேவையை அறிமுகம் செய்துள்ளது
இந்த அறிமுகத்தின் கீழ் அதன் 5G சேவையை விரிவுபடுத்தும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது
இப்பொழுது 17 முக்கிய டெலிகாம் வட்டாரங்களின் கீழ் மொத்தம் 133 நகரங்களுக்கு கொண்டு வந்துள்ளது
இந்தியாவின் மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone Idea (VI), தனது சென்னை கஸ்டமர்களுக்காக அதன் 5G சேவையை அறிமுகம் செய்துள்ளது, அதாவது இந்த அறிமுகத்தின் கீழ் அதன் 5G சேவையை விரிவுபடுத்தும் விதமாக இப்பொழுது 17 முக்கிய டெலிகாம் வட்டாரங்களின் கீழ் மொத்தம் 133 நகரங்களுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது இப்பொழுது Vi 5G யின் முக்கிய மெட்ரோ நகரங்களான மும்பை,டெல்லி-NCR, கொல்கத்தா மற்றும் சென்னை உட்பட இதனுடன் சேர்ந்து 50க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு 5G சேவையை வோடபோன் ஐடியா கொண்டுவந்துள்ளது.
Surveyதமிழ்நாட்டின் இந்த வட்டாரங்களுக்கு கிடைக்கும் 5G சேவை
இப்பொழுது நாடு முழுவதும் மேலும் 90 நகரங்களுக்கு 5ஜி சேவையைக் கொண்டுவரும் திட்டங்களை அந்தத் டெலிகாம் நிறுவனம் அறிவித்திருந்தது .மேலும்,VI நிறுவனம் 2026 மே மாதத்திற்குள் கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், வேலூர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் 5ஜி சேவைகளை விரிவுபடுத்தும்.
இதையும் படிங்க Jio வின் மிக குறைந்த விலை திட்டம் என்றால் அது இது தான் கம்மி விலையில் அதிக வேலிடிட்டி
வாடிக்கையாளர்களுக்கான 5ஜி அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, வோடஃபோன் ஐடியா நிறுவனம், நெட்வொர்க் செயல்திறனைத் தானாகவே மேம்படுத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான சுய-உகந்ததாக்கும் நெட்வொர்க்குகளை (SON) செயல்படுத்தியுள்ளது.
Vi நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டார வணிகத் தலைவர் சாய் வெங்கடராமன் கூறுகையில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் Vi-யின் 5ஜி நெட்வொர்க் அதிகரிக்க நாங்கள் துரிதப்படுத்தி, மாநிலத்தில் உள்ள முக்கிய சந்தைகளில் எங்கள் இருப்பை வலுப்படுத்தி வருகிறோம். சென்னையில் இந்த அறிமுகம், மதுரையில் ஏற்கனவே உள்ள எங்கள் இருப்பு மற்றும் கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், வேலூர் போன்ற நகரங்களில் வரவிருக்கும் விரிவாக்கங்களுடன் இணைந்து, இந்தப் பயணத்தில் ஒரு முக்கிய படியாக அமைகிறது,” என்றார்.
அதன் பிறகு நாடெங்கும் மிக சிறந்த நெட்வேர்க்கு மிக சிறந்த வளர்ச்சியாக அமையும் இதனுடன் அன்லிமிடெட் டேட்டா பிளான் உடன் இதில் VI நோன ஸ்டாப் ஹீரோ நன்மை பெறலாம் மேலும் மிக சிறந்த அனுபவம் பெற முடியும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile