vodafone idea (9)
வோடஃபோன் ஐடியா(VI) தனது ப்ரீபெய்ட் மொபைல் பயனர்களுக்கு சில சிறந்த திட்டங்களை வழங்குகிறது. இந்தத் திட்டம் நிறுவனத்தின் நீண்ட காலத் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டத்தின் விலை ரூ,3999 யில் வருகிறது, இது இதனை மிகவும் அற்புதமான திட்டமாக மாற்றுகிறது. அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் பதற்றத்திலிருந்து விடுபட விரும்பும் பயனர்களுக்கு இது குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும்.
வோடஃபோன் ஐடியா தனது கஸ்டமர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் ஒரு மிகச் சிறந்த திட்டத்தை வழங்குகிறது . இதை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டின் விலை ரூ,3999 செலுத்தி ஆக்டிவேட் செய்துகொள்ளலாம் . இந்தத் திட்டத்தின் சிறப்புப் பலன்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பேசினால் கஸ்டமர்களுக்கு தினமும் 2GB டேட்டாவை வழங்குகிறது. டேட்டா ஒதுக்கீட்டு லிமிட் தீர்ந்த பிறகும், இன்டர்நெட் ஸ்பீட் 64Kbps இருக்கும்.
கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தில் 365 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங் பலன்களை வழங்குகிறது. கஸ்டமர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். மேலும், தினமும் 100 (SMS) அனுப்பவும் அந்நிறுவனம் அனுமதிக்கிறது. அதாவது, ஒரு முழு ஆண்டுக்கு நீங்கள் ஒரு நாளைக்கு 100 மெசேஜ் அனுப்ப அனுமதிக்கப்படுகிறீர்கள்.
இந்த திட்டத்தின் மூலம், கஸ்டமர்களுக்கு ஒரு வருடத்திற்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது . ஜியோஹாட்ஸ்டார் மொபைல் மூலம், நீங்கள் பிரத்தியேகமான டிவி நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் லைவ் ஸ்போர்ட்ஸ் கண்டு மகிழலாம். இதை தவிர கஸ்டமர்கள் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் லைட் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறார்கள் . இந்தச் சப்ஸ்க்ரிப்ஷன் 365 நாட்களுக்குச் வேலிடிட்டி வழங்குகிறது , இதன் மூலம் நீங்கள் பிரைம் வீடியோ உள்ளடக்கத்தை இலவசமாகப் பார்க்கலாம். இதை உங்கள் டிவி அல்லது மொபைல் சாதனத்தில் பார்க்கலாம். மேலும், HD உள்ளடக்கத்தை HD (720p) தரத்தில் ஸ்ட்ரீம் செய்யலாம். நிறுவனத்திடமிருந்து இலவச ஒரு நாள் டெலிவரி என்ற நன்மையையும் நீங்கள் பெறுகிறீர்கள்.
இதையும் படிங்க VI யின் சூப்பர் அதிரடி தமிழ்நாட்டில் மூன்று முக்கிய நகரங்களில் 5G சேவை
இந்தத் திட்டத்தின் மூலம், பயனர்கள் காலை 12 மணி முதல் இரவு 12 மணி வரை இலவச அன்லிமிடெட் டேட்டாவைப் வழங்குகிறது . மேலும், திங்கள் முதல் வெள்ளி வரை பயன்படுத்தப்படாத டேட்டா சனிக்கிழமைக்கு எடுத்துச் செல்லப்படும். இதன் மூலம் மீதமுள்ள டேட்டா வீணாவதில்லை. அதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்துடன் நிறுவனம் மாதத்திற்கு 2GB இலவச பேக்கப் டேட்டாவையும் வழங்குகிறது.