இந்தியாவில் 5G வழங்க ஜியோ அதிரடி திட்டடம்…!

இந்தியாவில் 5G  வழங்க  ஜியோ  அதிரடி திட்டடம்…!
HIGHLIGHTS

இந்தியாவில் அமெரிக்க நிறுவனத்தை கைப்பற்றி 5ஜி வழங்கும் ஜியோஅதிரடி திட்டம் தீட்டி வருகிறது

சும்மாவே டெலிகாம் நிறுவனமான  ஜியோ வழங்கும் பல அதிரடி திட்டங்களை சமாளிக்க முடிவதில்லை இதிலும் மேலும் புதிய திட்டம் 5G வழங்கும் திட்டம்  அறிவித்துள்ளது.

இந்தியாவில் 5ஜி மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் சேவைகளை முழுமையாக வழங்க ரிலையன்ஸ் ஜியோ அமெரிக்க நிறுவனத்தை கைப்பற்ற இருப்பதாக அறிவித்துள்ளது. 

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

https://static.digit.in/default/77fa7cde6e9345d899ff6a351223027e1aa6d47e.jpeg

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ராடிசிஸ் கார்ப்பரேஷன் டெலிகாம் சேவை மற்றும் உதிரிபாகங்களை தயாரித்து வழங்கும் நிறுவனத்தை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் கைப்பற்ற இருக்கிறது. ராடிசிஸ் நிறுவனத்தை 7.5 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.510 கோடி) கொடுத்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வாங்க இருக்கிறது.

https://static.digit.in/default/15cacc352b512633fad6ba7bdc5f8bb5036dc716.jpeg

இதன் மூலம் இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு 5ஜி மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் சேவைகளை விரிவாக வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பங்கு ஒன்றுக்கு 1.72 டாலர்கள் வீதம் கட்டணமாக செலுத்த இருக்கிறது. ராடிசிஸ் நிறுவனத்தை கைப்பற்றுவதன் மூலம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் மட்டுமின்றி தொழில்நுட்ப நிறுவனமாகவும் உருவெடுக்கும்.

https://static.digit.in/default/ff8dbb5f710cff76420f9b763f8f091c3312d46d.jpeg
அமெரிக்க நிறுவனத்தை கைப்பற்றுவதன் மூலம் சர்வதேச சந்தையில் 5ஜி, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் மற்றும் ஓபன் சோர்ஸ் ஆர்கிடெட்ச்சர் அடாப்ஷன் உள்ளிட்ட பிரிவுகளில் புதுமைகளை கண்டறியும் தொழில்நுட்ப நிறுவனமாக ஜியோ உருவெடுக்கும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

புதிய நிறுவனத்தை கைப்பற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிதி வழங்க இருக்கிறது. ராடிசிஸ் நிறுவனம் மென்பொருள், வன்பொருள், டெலிகாம் சேவை வழங்குவோருக்கு சேவை மற்றும் உபகரணங்களை வழங்கி வருகிறது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ராடிசிஸ் நிறுவனங்களிடையேயான ஒப்பந்தம் 2018 நான்காம் காலாண்டு வாக்கில் நிறைவுற இருக்கிறது.

https://static.digit.in/default/bd1282f23ec3115fb4e53dff196b67cb14b51c22.jpeg

மார்ச் 2018 காலாண்டு வாக்கில் ராடிசிஸ் நிறுவனம் 64 லட்சம் டாலர்கள் நஷ்டமடைந்து, வருவாய் ரீதியாக 2.62 கோடி டாலர்கள் இழந்தது. அமெரிக்காவின் ஆரிகான் பகுதியை சார்ந்த ராடிசிஸ் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையை கொண்டிருக்கிறது. பெங்களூருவில் இயங்கும் இந்த ஆலையில் மொத்தம் 600 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பொறியாளர் குழு, விற்பனை மற்றும் சேவை பிரிவுகள் இயங்கி வருகின்றன.

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo