Jio அம்பானியின் இரண்டு மிக பெரிய மாற்றத்தால் மக்களுக்கு இருக்கும் பெரும் பாதிப்பு அது என்ன
இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் ப்ரீபெய்ட் திட்டத்தில் இரண்டு மிக பெரிய மாற்றத்தை செய்துள்ளது, இதன் மூலம் மக்களுக்கு பெரும் அளவில் பாதிப்பு ஏற்ப்படலாம். மேலும் நீங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் புதிய கஸ்டமராக இருந்தால் உங்களுக்கு இந்த நன்மை கிடைக்க வாய்ப்பில்லை அதில் முக்கிய இரு மாற்றங்கள் என பார்த்தால் முன்பு Google AI Pro சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் இன்கம்மிங் கால் சேவையை நிறுத்தப்படும் இதன் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.
Jio செய்த அந்த இரண்டு மாற்றம்.
ரிலையன்ஸ் ஜியோ முதலில் பயனர்களுக்கான கூகுள் ஏஐ ப்ரோ சப்ஸ்க்ரிப்ஷன் நீக்கியது. ஏஐ ப்ரோ சப்ஸ்க்ரிப்ஷன் பலன் ரூ. 35,100 மதிப்புடையதாக இருந்தது. ஏனெனில், இந்த சப்ஸ்க்ரிப்ஷன் 18 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. ஜியோ பல ப்ரீபெய்ட் திட்டங்களுடன் இதை வழங்கி வந்தது. ஆனால் இப்போது அது இல்லை. ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திலிருந்தும் கூகுள் ஏஐ ப்ரோ பலன் நீக்கப்பட்டுள்ளது. இப்போது, இதற்குப் பதிலாக கேன்வா (Canva) சேர்க்கப்பட்டுள்ளது. கேன்வா ப்ரோ மற்றும் கேன்வா ப்ரோ லைட் சந்தாக்கள் ரிலையன்ஸ் ஜியோவின் பல ப்ரீபெய்ட் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
இன்கம்மிங்க கால் சேவை நிறுத்தம்
இரண்டாவது மாற்றம் ரிலையன்ஸ் ஜயோ சமிபத்தில் jio Voice Only Call திட்டத்தை அறிமுகம் செய்தது மேலும் அதை உட்பட இனி சிம் எக்டிவாக இல்லை என்றால் அதாவது சிம் கார்ட் ரீச்சார்ஜ் தீர்ந்து போனால் இன்கம்மிங் கால் சேவையும் நிறுத்தப்படும் இதன் மூலம் கஸ்டமர்களுக்கு பிரச்னை ஏற்ப்படலாம்.
இதுவரை பயனர்களுக்கு இத்தகைய நிலை இருந்ததில்லை. நடைமுறையில், இது ஜியோவை ஏர்டெல் நிறுவனத்திற்கு இணையானதாக மாற்றுகிறது. ஜியோ தரப்பிலிருந்து இது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் ஏதும் இல்லை என்றாலும், பிரபலமான தொழில்நுட்பத் தகவல் டிப்ஸ்டர் நபரான அபிஷேக் யாதவ், இது குறித்த தகவலை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த இரண்டு மாற்றங்களும் பயனர்களின் அனுபவத்தை மாற்றியமைக்கும்.