Reliance Jio இந்தியாவில் சேட்லைட் சேவையில் களமிறங்க தயார்

Reliance Jio இந்தியாவில் சேட்லைட் சேவையில் களமிறங்க தயார்
HIGHLIGHTS

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் Jio பிளாட்பர்களில் விரைவில் நாட்டில் சேட்லைட் இன்டர்நெட் சேவையைத் அறிமுகம் செய்யும்

SES உடன் இணைந்து ஆர்பிட் கனெக்ட் என்ற கூட்டு முயற்சியை உருவாக்கியுள்ளது.

அமேசான் கைப்பரில் சுமார் $10 பில்லியன் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

டெலிகாம் முதல் பெட்ரோலியம் வரையிலான பிஸ்னஸ்களில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் Jio பிளாட்பர்களில் விரைவில் நாட்டில் சேட்லைட் இன்டர்நெட் சேவையைத் அறிமுகம் செய்யும் இதற்காக, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லக்சம்பர்க்கின் SES உடன் இணைந்து ஆர்பிட் கனெக்ட் என்ற கூட்டு முயற்சியை உருவாக்கியுள்ளது.

கோடீஸ்வரர் எலோன் மஸ்க்கின் Starlink மற்றும் இ-காமர்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் ஆகியவையும் நாட்டில் சேட்லைட் இன்டர்நெட் சேவையை தொடங்க அனுமதி கோரியுள்ளன. ஆர்பிட் கனெக்ட் இதற்கான ஒப்புதலை இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தில் (IN-SPACe) பெற்றுள்ளது. இதன் மூலம், ஆர்பிட் கனெக்ட் நாட்டின் விண்ணில் சேட்லைட்டில் இயக்க முடியும். இருப்பினும், இந்த சேவையைத் தொடங்க, நிறுவனம் டெலிகாம் துறையின் அனுமதியைப் பெற வேண்டும். இன்மார்சாட் என்ற மற்றொரு நிறுவனத்திற்கும் அதிவேக சேட்லைட் அடிப்படையிலான இன்டர்நெட் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக IN-SPAce யின் தலைவர் பவன் கோயங்கா ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

Starlink மற்றும் amazon யின் Kuiper இதில் விண்ணபித்து இருந்தது கடந்த ஆண்டு, பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய யூடெல்சாட் இந்தச் சேவைக்கான அனுமதியைப் பெற்றிருந்தது. நாட்டின் சேட்லைட் பிராட்பேண்ட் சேவை சந்தை அடுத்த ஐந்தாண்டுகளில் ஆண்டுக்கு 36 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்து சுமார் 1.9 பில்லியன் டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் கைப்பரில் சுமார் $10 பில்லியன் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

சேட்லைட் கனெக்சன் சேவைகளை தொடங்க, டெலிகாம் நிறுவனங்கள் பாதுகாப்பு அனுமதி மற்றும் பல அமைச்சகங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். கடந்த ஆண்டு, இந்திய மொபைல் காங்கிரஸில், ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோஸ்பேஸ்ஃபைபர் சேவையுடன் நான்கு தொலைதூர பகுதிகளை இணைத்துள்ளதாக கூறியிருந்தது. குஜராத்தில் உள்ள கிர், சத்தீஸ்கரின் கோர்பா, ஒடிசாவில் உள்ள நபரங்பூர் மற்றும் அசாமில் ஜோர்ஹாட் ஆகியவை இந்த வயல்களாகும் என ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.

செயற்கைக்கோள் இணைய சேவைக்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதில் உரிமம் வழங்கும் செயல்முறை இருக்கலாம். இதன் மூலம், இந்த சேவையை வழங்கும் நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் எடுக்க வேண்டியதில்லை. இது Starlink க்கு பயனுள்ளதாக இருக்கும். வெளிநாட்டு இணைய சேவை நிறுவனங்கள் இந்த அலைக்கற்றைக்கு உரிமம் கோரியிருந்தன. இந்தியாவில் இதற்கான ஏலம் நடத்தப்பட்டால், மற்ற நாடுகளிலும் இந்த நடைமுறையை அமல்படுத்தலாம் என இந்நிறுவனங்கள் நம்புகின்றன. இதனால் இந்த நிறுவனங்களின் செலவுகள் அதிகரிக்கலாம்.

இதையும் படிங்க Airtel யின் ரூ,359 திட்டம் OTT பிரியர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo