Reliance Jio free canva
Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு Canva உடன் கை கோர்த்துள்ளது, மேலும் இதில் Canva’s AI-பவர்ட் அம்சங்கள் கொண்டு வந்துள்ளது, இந்த அம்சமானது இந்தியாவில் லட்ச கணக்கான மக்களுக்கு கிடைக்கும் மேலும் இப்பொழுது Canva Pro அல்லது Canva Pro Lite இலவசமாக வழங்குகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
அறிவிப்பின்படி, ரூ.399 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு கேன்வா ப்ரோ கிடைக்கும். ரூ.349 திட்டம் மற்றும் ரூ.349-க்கு மேற்பட்ட அனைத்து தினசரி 2ஜிபி திட்டங்களில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு கேன்வா ப்ரோ லைட் கிடைக்கும்.
தகுதியுள்ள பயனர்கள் இந்தப் பலனை 12 மாதங்களுக்கு எந்தக் கூடுதல் கட்டணமும் இன்றிப் பெறலாம். MyJio ஆப்யில் தொடர்புடைய சலுகையைத் தட்டுவதன் மூலம் இந்தச் சலுகையைப் பெறலாம். இதில் மறைமுகக் கட்டணங்கள் எதுவும் இல்லை என்று ஜியோ கூறுகிறது.
கேன்வா சலுகையின் மதிப்பு ரூ. 4,000 வரை இருக்கும் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஜியோவின் இந்த ஆபரை பெற கஸ்டமர்கள் ரூ,349 கொண்ட ரீச்சார்ஜ் திட்டத்தை பெற வேண்டும் இதில் அதிகபட்சமாக தினமும் 2GB டேட்டா கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் பெற வேண்டும் MyJio ஆப்க்கு செல்ல வேண்டும், கஸ்டமர்கள் ஆப்யின் ஹோம் ஸ்க்ரீனில் இந்தச் சலுகையைக் காண்பார்கள்; அதைத் தட்டுவதன் மூலம் Canva Pro அல்லது Pro Lite-க்கான 12 மாத சப்ஸ்க்ரிப்ஷன் செயல்படுத்தப்படும். தங்கள் ஜியோ (Jio) நம்பருக்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் கஸ்டமர்கள் இந்தச் சலுகையைப் பெறலாம்.
இதையும் படிங்க தூள் கிளப்பும் Jio அம்பானி வெறும் ரூ,51 யில் 5G உடன் கிடைக்கும் அன்லிமிடெட் டேட்டா
கஸ்டமர்கள் தங்கள் Canva அக்கவுண்டில் எங்கிருந்தும் லோகின் செய்து , பிரீமியம் அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் மற்றும் தங்கள் விருப்பப்படி வடிவமைத்துக்கொள்ளலாம். கேன்வா ப்ரோ லைட்டில், கஸ்டமர்களுக்கு அடிப்படை 3 பிராண்ட் கிட்கள் மற்றும் 50GB வரை கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. மேலும், இலவச திட்டத்திலேயே மேம்பட்ட AI டூல்களுக்கான அக்சஸ் அவர்கள் பெறுகிறார்கள். அதேசமயம், கேன்வா ப்ரோ அடிப்படை 5 பிராண்ட் கிட்கள் மற்றும் 100GB வரை கிளவுட் ஸ்டோரேஜை வழங்குகிறது. இது மட்டுமல்லாமல், கஸ்டமர்களுக்கு மேம்பட்ட AI கடூல்களுக்கான அக்சஸ் கிடைக்கிறது.
Canva வின் சிறப்பு என்னனு பார்க்கும்போது இது ப்ரீமியம் அம்சத்துடன் போட்டோ, வீடியோ போன்றவை உங்களுக்கு தேவையான வகையில் எடிட் செய்ய முடியும், இதை தவிர பள்ளி ப்ரொஜெக்ட் மற்றும் சோசியல் மீடியா போஸ்ட்களுக்கு மற்றும் கிரீட்டிங் போன்ற பலவகையில் இது பயன்படுகிறது