Jio வின் இந்த திட்டத்தில் கிடைக்கும் அதிகபட்ச 900GB டேட்டா 365 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும் OTT நன்மை

HIGHLIGHTS

Reliance Jio அதன் குறைந்த விலை ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளது,

இது நீண்ட நாள் வேலிடிட்டி, தினமும் அதிகபட்சமான இன்டர்நெட் டேட்டாவுடன் வருகிறது

. இந்த திட்டம் 365 நாட்களுக்கு வேலிடிட்டியாகும்

Jio வின் இந்த திட்டத்தில் கிடைக்கும் அதிகபட்ச 900GB டேட்டா 365 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும் OTT நன்மை

நாட்டின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் குறைந்த விலை ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளது, நிறுவனம் தனது பல திட்டங்களை சமீபத்தில் அப்டேட் செய்துள்ளது இது தவிர, பல புதிய மொபைல் திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. மிகவும் குறைந்த விலை திட்டங்களைப் பற்றி பேசுகையில், நிறுவனம் இதுபோன்ற சில வருடாந்திர திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அவை டேட்டா உட்பட பல பேக் நன்மைகளுடன் வருகின்றன. அத்தகைய ஒரு குறைந்த திட்டத்தைப் பற்றி பார்க்கலாம் இதில் கிடைக்கும் நன்மையை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Reliance Jio வின் 2999 ரூபாய் கொண்ட திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோ ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது இது நீண்ட நாள் வேலிடிட்டி, தினமும் அதிகபட்சமான இன்டர்நெட் டேட்டாவுடன் வருகிறது இதில் கூடுதலாக எக்ஸ்ட்ரா நன்மைகளுடன் வருகிறது இந்த திட்டத்தில் 5ஜி அன்லிமிடெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது. நிறுவனம் ரூ.2999 திட்டத்தில் பெரும் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் 365 நாட்களுக்கு வேலிடிட்டியாகும் இந்த திட்டத்தில், தினசரி அடிப்படையில் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது 365 நாட்களின் மொத்த டேட்டா பலனைப் பார்த்தால் 912.5ஜிபி டேட்டா. இது அன்லிமிடெட் காலிங் திட்டமாகும், இதில் லோக்கல் மற்றும் STD கால்களும் அடங்கும். இதன் பொருள் நீங்கள் உங்கள் நெருங்கியவர்களுடன் அன்லிமிடெட் முறையில் பேசலாம்.

ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது இது தவிர, இந்த திட்டம் உங்களுக்கு சில இலவச நன்மைகளையும் வழங்குகிறது. இதில், JioTV, JioCinema, JioCloud பயன்பாடுகளின் சந்தா கிடைக்கிறது. JioTV மூலம், திட்டத்தின் வேலிடிட்டியாகும் வரை பயன்பாட்டில் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளை நீங்கள் அனுபவிக்க முடியும். திரைப்படங்களைப் பார்க்க விரும்பும் பயனர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் ஜியோசினிமாவை ரசிக்கலாம்.

இதை தவிர இந்த திட்டத்தில் உங்களுக்கு மேலும் ஒரு சிறப்பு நன்மை இருக்கிறது, இதில் உங்களுக்கு கிடைக்கும் JioCloud ஆப் யின் நன்மை உடன் இதில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா ஸ்டோரேஜ் வழங்குகிறது , அதாவது போனில் ஸ்பேஸ் பிரச்சனை இருந்தால் இந்த ஆப் மூலம் ஸ்டோரேஜை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் தகவலுக்கு, நீங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.

இதையும் படிங்க:6000mAh பேட்டரி உடன் Samsung யின் அசத்தலான போன் அறிமுகம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo