Jio 1.5GB data
Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு தனது மில்லியன் கணக்கான கஸ்டமர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் 1.5ஜிபி தினசரி டேட்டா திட்டங்களை நிறுத்தி வரும் நிலையில், ஜியோ தொடர்ந்து 1.5ஜிபி தினசரி டேட்டாவுடன் பல திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் அதிக வேலிடிட்டி நன்மை வழங்குகிறது அதில் ஒன்று ரூ,666 மற்றும் ரூ,579 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ஜியோவின் ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ,666 ஆகும், அதாவது ஒரு நாளைக்கு ரூ]=50 செலவாகும். இந்தத் திட்டத்தின் நன்மைகளில் இலவச தேசிய ரோமிங் மற்றும் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் ஆகியவை அடங்கும். மேலும், இந்தத் திட்டம் தினமும் 100 இலவச SMS மெசேஜ்கள் மற்றும் 1.5ஜிபி அதிவேக டேட்டாவையும் வழங்குகிறது மற்றும் இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது
இது மொத்தம் 105GB அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இருப்பினும், இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் இலவச வரம்பற்ற 5G டேட்டாவை வழங்கவில்லை. ஜியோ AI கிளவுட் மற்றும் ஜியோ டிவி OTT செயலிகளுக்கான அக்சஸ் ஆகியவை மற்ற நன்மைகளில் அடங்கும்.
இதையும் படிங்க VI ரூ,1005 யின் திட்டம் பார்க்க விலை அதிக கொண்ட திட்டம் என்றாலும் நன்மையோ தூள் கிளப்புது அப்படி என்ன
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 579 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதி உள்ளது. கூடுதலாக, உங்களுக்கு தினமும் 1.5GB டேட்டா மற்றும் 100 SMS கிடைக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சேவை வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.
ஜியோவின் இந்த ரூ. 579 திட்டத்தில், ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சந்தாக்களும் அடங்கும். கூடுதலாக, பயனர்கள் ரூ. 35,100 மதிப்புள்ள 18 மாத கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ சந்தாவையும் எந்தக் கூடுதல் கட்டணமும் இன்றிப் பெறுகிறார்கள். FUP (நியாயமான பயன்பாட்டுக் கொள்கை) தரவு வரம்பு தீர்ந்த பிறகு, வேகம் 64 Kbps ஆகக் குறைந்துவிடும். கூகுள் ஜெமினி சலுகையைத் தொடர்ந்து பயன்படுத்த, பயனர்கள் ரூ. 299 அல்லது அதற்கும் அதிகமான விலையுள்ள 1.5GB தினசரி தரவுத் திட்டத்தில் இருக்க வேண்டும் என்று ஜியோ குறிப்பிடுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.