BSNL விரைவில் நாடு முழுக்க 4ஜி சேவையை கொண்டு வர இருக்கிறது.

BSNL விரைவில் நாடு முழுக்க 4ஜி சேவையை கொண்டு வர இருக்கிறது.
HIGHLIGHTS

BSNL விரைவில் நாடு முழுக்க 4ஜி சேவைகளை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

BSNL நிறுவனத்திற்கு 200 MHz பேண்டில் 5 MHZ ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டு இருக்கிறது

அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் விரைவில் நாடு முழுக்க 4ஜி சேவைகளை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய தொலைதொடர்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
 
தற்சமயம் BSNL நிறுவனத்திற்கு 200 MHz பேண்டில் 5 MHZ ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்பெக்டரத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் மும்பை உள்பட 20 வட்டாரங்களில் பயன்படுத்தி வருகிறது. எனினும், இந்த சேவை டெல்லி மற்றும் ராஜஸ்தானில் வழங்கப்படவில்லை.

தற்போதைய  தகவல்களின் படி நோக்கியா, எரிக்சன், தேஜஸ் நெட்வொர்க், TCL, டெக் மஹிந்திரா என பல்வேறு நிறுவனங்கள் 4ஜி நெட்வொர்க்குகளை கட்டமைக்க விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக டெல்லி மற்றும் ராஜஸ்தான் வட்டாரங்களில் 850 MHz-இல் 5 MHz மற்றும் 1800 MHz-இல் 10 MHz ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்பெக்ட்ரம் 2040 வரை வழங்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் BSNL நிறுவனம் 900 MHz மற்றும் 1800 MHz பயன்படுத்தி 2ஜி சேவைகளை வழங்கி வருகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo