BSNL யின் குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி காலிங், டேட்டா போன்ற பல நன்மை jio,Airtel கிட்டகூட நெருங்க முடியாது
இந்தியாவில் அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,485 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டமானது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும் இது சிறந்த வெல்யூ திட்டமாகும் இந்த திட்டமானது இந்திவில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் பொருந்தும் மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,485 ப்ரீபெய்ட் பிளான்
BSNL-ன் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS/நாள் உடன் வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 72 நாட்கள். இன்றைய சந்தையில் இது மிகவும் குறைந்த விலையில் 2GB தினசரி டேட்டா திட்டமாகும். குறிப்பாக இந்த சலுகையை தனியார் டெலிகாம் ஆபரேட்டர்களிடமிருந்து அதிக பணம் இருந்தும் இது போல அதிக வேலிடிட்டி வழங்குவதில்லை
இருப்பினும், தனியார் டெலிகாம் நிறுவனங்களுடன் நீங்கள் பெறுவதை விட BSNL யின் நெட்வொர்க் அனுபவம் நிச்சயமாகக் குறைவு., அதாவது பிஎஸ் என்எல் அதன் கஸ்டமர்களுக்கு தொடர்ந்து பல குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி திட்டங்களை கொண்டு வருகிறது ஆனால் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அதிக பணம் இருந்தபோதிலும் அதிக வேலிடிட்டி வழங்குவதில்லை அதே போல இங்கு சில குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை பார்க்கலாம் வாங்க.
BSNL ரூ,599 திட்டம்.
BSNL-ன் ரூ.599 திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. BSNL அதன் X அக்கவுண்டில் இது குறித்த தகவல்களை வழங்கியிருந்தது. இந்த திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது 84 நாட்கள் நீண்ட வேலிடிட்டியை வழங்கும் . இது தவிர, இந்த 84 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 3 ஜிபி இன்டர்நெட் டேட்டாவை வழங்குகிறது . அதாவது இந்த திட்டத்தில் மொத்தம் 252 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, பயனர்கள் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS-ஐயும் வழங்குகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile