புது சலுகைகள் Airtel வெளியிட்ட தகவல் 1.5 ஜிபி டேட்டா வழங்கும்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 16 Aug 2022
HIGHLIGHTS
  • பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு சத்தமின்றி இரண்டு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

  • விலை ரூ. 519 மற்றும் ரூ. 779 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இவை தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகின்றன

  • ஏர்டெல் ரூ. 779 சலுகையும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளை நாடு முழுக்க அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வழங்குகிறது.

புது சலுகைகள் Airtel வெளியிட்ட தகவல் 1.5 ஜிபி டேட்டா வழங்கும்.
புது சலுகைகள் Airtel வெளியிட்ட தகவல் 1.5 ஜிபி டேட்டா வழங்கும்.

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு சத்தமின்றி இரண்டு புது சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 519 மற்றும் ரூ. 779 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இவை தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகின்றன. இத்துடன் கூடுதல் பலன்களும் வழங்கப்படுகின்றன.

பயனர்கள் மத்தியில் அதிக பிரபலம் மற்றும் குறைந்த விலையில் கிடைப்பதால் புது சலுகைகள் பற்றிய அறிவிப்பு நல்ல வரவேற்பை பெறும். சமீப காலங்களில் ரிசார்ஜ் கட்டணங்கள் அவ்வப்போது அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், குறைந்த விலை சலுகைகள் சற்றே ஆறுதலாக அமைந்துள்ளன.

ரூ. 519 மற்றும் ரூ. 779 பிரீபெயிட் சலுகைகளும் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், ரோமிங் கால்கள் , மூன்று மாதங்களுக்கு 24-7 சர்கிள் சந்தா, இலவச ஹெலோ-டியுன்கள் மற்றும் இதர பலன்களை வழங்குகின்றன.

ஏர்டெல் ரூ. 779 பலன்கள்:

ஏர்டெல் ரூ. 779 சலுகையும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளை நாடு முழுக்க அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வழங்குகிறது. இத்துடன் 135 ஜிபி டேட்டா, தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது. இந்த சலுகை வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

இரண்டு புதிய சலுகைகளுடன் ஏர்டெல் தேங்ஸ் பலன்கள், மூன்று மாதங்களுக்கு அப்பல்லோ 24-7 சர்கிள் சந்தா, பாஸ்டேக் மீது ரூ. 100 கேஷ்பேக், இலவச ஹெலோ-டியுன்கள், விண்க் மியூசிக் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா தீர்ந்த போதிலும் 64Kbps வேகத்தில் இணைய சேவையை தொடர்ந்து பயன்படுத்தலாம். இரு சலுகைகளும் ஏர்டெல் தேங்ஸ் செயலி மற்றும் ஏர்டெல் வலைதளத்தில் கிடைக்கின்றன.

ஏர்டெல் ரூ. 519 பலன்கள்:

புதிய ஏர்டெல் ரூ. 519 சலுகை அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளை நாடு முழுக்க அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வழங்குகிறது. இத்துடன் 90 ஜிபி டேட்டா, தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது. இந்த சலுகை வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும்.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Airtel brings two new plans with unlimited voice calls, 1.5GB data per day
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements