Airtel அறிமுகம் செய்தது புதிய திட்டம் ஒரு ரீச்சார்ஜ் செய்தால், மற்றொன்று இலவசம்
Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது
இந்த திட்டத்தின் விலை ரூ,349 மற்றும் ரூ,399 யில் வருகிறது
அதாவது, முதல் 28 நாட்களுக்குப் பிறகு, கூடுதலாக மேலும் 28 நாட்களுக்கான வேலிடிட்டி காலம் கிடைக்கும்
இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர் ஒரு திட்டத்தை செலக்ட் செய்தால் மற்றொரு திட்டம் இலவசமாக கிடைக்கும் இந்த திட்டத்தின் விலை ரூ,349 மற்றும் ரூ,399 யில் வருகிறது அதாவது, முதல் 28 நாட்களுக்குப் பிறகு, கூடுதலாக மேலும் 28 நாட்களுக்கான வேலிடிட்டி காலம் (validity) அவர்களுக்குக் கிடைக்கும். இருப்பினும், இந்தச் சலுகை குறித்து முழு தகவல் பெறலாம் வாங்க.
Bharti Airtel ரூ,349 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை.
பார்தி ஏர்டெல்லின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் காலிங், தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும். இந்த பேக்கின் பலன்களாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ரூ.4,000 மதிப்புள்ள அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம், ஏர்டெல் சேஃப் மற்றும் இலவச ஹலோடியூன்ஸ் ஆகியவை உள்ளன. மேலும், இந்தத் திட்டத்துடன் கூடுதலாக ஒரு இலவச ரீசார்ஜும் வழங்கப்படுகிறது.
Airtel ரூ,399 திட்டம்.
இந்த ஏர்டெல் (Airtel) திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி காலத்தைக் கொண்டுள்ளது. அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 SMS பலன்களுடன், இதில் 'அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம்' (Adobe Express Premium) சப்ஸ்க்ரிப்ஷன் கிடைக்கிறது இது ரூ.349 திட்டத்தில் உள்ளதைப் போன்றே வழங்கப்படுகிறது. டேட்டாவைப் பொறுத்தவரை, இந்தத் திட்டம் அன்லிமிடெட் 4G மற்றும் 5G டேட்டாவை வழங்குகிறது; இதில் 28 நாட்களுக்கு மொத்தம் 300 ஜிபி (300GB) வரையிலான பயன்பாட்டு வரம்பு (Fair Usage Policy - FUP) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினசரி டேட்டா பயன்பாட்டிற்கு எந்த லிமிட் இல்லை.
ஏர்டெல் 1 + 1 ரீசார்ஜ் சலுகையை இலவசமாக வழங்குகிறது. ரூ.349 மற்றும் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டங்கள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து டெலிகாம் வட்டங்களிலும் கிடைக்கின்றன. ஏர்டெல் இந்தத் திட்டங்களை ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு வழங்குகிறது.