ஜியோபோனில் இப்பொழுது உங்களுக்கு யூடியூப் கிடைக்கும்…!

HIGHLIGHTS

ஜியோஸ்டோரில் யூடியூப் ஆப் கிடைக்கும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

ஜியோபோனில்  இப்பொழுது உங்களுக்கு யூடியூப் கிடைக்கும்…!

ஜியோஸ்டோரில் யூடியூப் ஆப் கிடைக்கும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. அந்த வகையில் ஜியோபோன் 2 மற்றும்  ஜியோ 1 மாடல்களை பயன்படுத்துவோர் இனி யூடியூப் செயலியை பயன்படுத்தலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கைஓ.எஸ்.-க்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கும் யூடியூப் செயலி ஜியோபோனில் பயன்படுத்த சிறப்பான அனுபவத்தை வழங்கும். ஜியோபோன்களில் வாட்ஸ்அப் வசதி சமீபத்தில் வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் யூடியூப் செயலிக்கான அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

யூடியூப், வாட்ஸ்அப் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் ஆப் உள்ளிட்டவை ஜியோபோன்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி வழங்கப்பட்டு விட்டது என ரிலையன்ஸ் ஜியோ தலைவர் தெரிவித்தார்.

ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களுக்கான யூடியூப் ஆப் ஜியோ ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது. செயலியை டவுன்லோடு செய்து வீடியோக்களை சீராக பார்த்து ரசிக்கலாம். கைஓ.எஸ். தளம் என்றாலும், ஆன்ட்ராய்டில் உள்ளதை போன்றே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile