Jio உடன் T-Mobile கூட்டு இதன் மூலம் ஸ்லொவ் இன்டர்நெட் மற்றும் ரோமிங் பிரச்சனை இல்லை

HIGHLIGHTS

Reliance Jio மற்றும் அமெரிக்க நிறுவனமான T-Mobile உடன் கைகோர்த்துள்ளது

உலகெங்கிலும் 5G ஸ்டேன்ட்லைன் (5G SA) ரோமிங் சேவை ஆரம்பம் செய்துள்ளது.

இந்தியாவிற்கு வரும் டி-மொபைல் கஸ்டமர்களுக்கும் ஜியோவின் 5G SA நெட்வொர்க் சேவை கிடைக்கும்.

Jio உடன் T-Mobile  கூட்டு இதன் மூலம் ஸ்லொவ் இன்டர்நெட் மற்றும் ரோமிங் பிரச்சனை இல்லை

இந்தியா மற்றும் அமெரிகவிர்க்கும் பயணம் செய்யும் பயனர்களுக்கு தங்களின் மொபைல் சேவையில் ரோமிங்கில் மிக பெரிய மாற்றம் இருக்க போகிறது தனியார் டெலிகாம் நிறுவனமான Reliance Jio மற்றும் அமெரிக்க நிறுவனமான T-Mobile உடன் கைகோர்த்துள்ளது இதன் மூலம் உலகெங்கிலும் 5G ஸ்டேன்ட்லைன் (5G SA) ரோமிங் சேவை ஆரம்பம் செய்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுறவின் கீழ், அமெரிக்காவிற்கு வரும் இந்திய ஜியோ (Jio) பயனர்களின் அலைபேசிகள் தானாகவே டி-மொபைலின் (T-Mobile) அதிவேக 5G ஸ்டாண்ட்அலோன் (5G SA) நெட்வொர்க்குடன் இணைக்கப்படும். அதேபோல, அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வரும் டி-மொபைல் கஸ்டமர்களுக்கும் ஜியோவின் 5G SA நெட்வொர்க் சேவை கிடைக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

5G ஸ்ட்டேன்ட்லைன் (5G SA)என்றால் என்ன ?

இதுவரை, சர்வதேச ரோமிங்கிற்குப் பயனர்கள் பெரும்பாலும் 4G உள்கட்டமைப்பைச் சார்ந்திருந்த நான்-ஸ்டாண்ட்அலோன் (NSA) 5G நெட்வொர்க்குகளுக்கு மாற வேண்டியிருந்தது. இதன் விளைவாக, வேகம் மற்றும் தாமதம் குறைந்தது. இருப்பினும், 5G ஸ்டாண்ட்அலோன் (5G SA) நெட்வொர்க்குகள் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட 5G கோரில் இயங்குகின்றன. எளிமையாகச் சொன்னால், இரண்டு நாடுகளுக்கு இடையே 5G SA நெட்வொர்க்குகளை இணைப்பதன் மூலம், பயனர்கள் சர்வதேச எல்லைகளைக் கடக்கும்போதும் கூட, தங்கள் சொந்த நாடுகளில் கிடைப்பதைப் போன்ற அதே அதிவேகம், குறைந்த தாமதம் மற்றும் நிலையான கனேக்ஷங்களை பெறுவார்கள்.

பயணம் ரீல்ஸ் லிருந்து அணைத்து சேவைகளிலும் இடையூறு இருக்காது.

இந்தப் புதிய தொழில்நுட்பம், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பயணம் செய்யும் தொழிலதிபர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்களின் மொபைல் பயண அனுபவத்தில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

  • வேகமான மற்றும் தடையற்ற கனெக்ஷன் : நீங்கள் விமான நிலையத்தில் தரையிறங்கிய உடனேயே, உங்களுக்குத் தடையற்ற 5G நெட்வொர்க் கிடைக்கும், எனவே Wi-Fi-ஐத் தேட வேண்டிய அவசியம் இருக்காது.
  • அல்ட்ரா-எச்டி ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங்: பயணத்தின்போது 4K/8K வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்வது, சோசியல் மீடியாக்களில் பயணக் காட்சிகளைப் பகிர்வது அல்லது உயர்தர ஆன்லைன் கேமிங் போன்றவை மிகவும் தடையின்றி நடைபெறும்.
  • பிஸ்னஸ் ஆப்களும் தாமதமும்: அலுவலகப் பணிகள், காணொளிக் கலந்துரையாடல் மற்றும் அதிக அளவுள்ள கிளவுட் கோப்புகளைப் பதிவிறக்குதல் போன்றவை மிகக் குறைந்த தாமதத்தால் பயனடையும்.
  • எதிர்கால ஆர்டிபிசியல் இண்டேளிஜஸ் சேவைகள்: இந்தக் கட்டமைப்பு ரோமிங்கிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாது, மாறாக எதிர்காலத்தில், இந்த இரு வலையமைப்புகளும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மொபைல் சேவைகள் மற்றும் IoT (பொருட்களின் கனெக்ஷன்) தீர்வுகளுக்கும் வழிவகுக்கும்.

இதையும் படிங்க TRAI யின் புதிய ரூல் டேட்டா முக்கியமில்லை ஆனால் வொயிஸ் SMS கட்டாயம் இருக்க வேண்டும்

இதில் எந்த டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது?

இதில் இரண்டு வெவ்வேறு நாட்டின் 5G ஸ்டேன்ட்லேன் நெட்வொர்க் கனெக்ஷன்
மிகவும் பாதுகப்பனது. இவ்விரு நிறுவனங்களையும் தொழில்நுட்ப ரீதியாக இணைப்பதில் சினவர்ஸின் (Syniverse) உலகளாவிய இணைப்புத் தளம் முக்கிய பங்காற்றியுள்ளது. டி-மொபைலின் (T-Mobile) தலைமை நெட்வொர்க் அதிகாரி அங்குர் கபூர் மற்றும் ஜியோவின் (Jio) சர்வதேச நெட்வொர்க் பிரிவுத் தலைவர் மார்க் யார்கோஸ்கி ஆகியோர், இந்தக்கூட்டு முயற்சியை வயர்லெஸ் தொலைத்தொடர்புத் துறையில் ஒரு புரட்சிகரமான நடவடிக்கை என்று வர்ணித்துள்ளனர். இரு முக்கிய நாடுகளுக்கு இடையிலான அடுத்த தலைமுறை கனெக்ஷன் வசதிக்கு, இத்தொழில்நுட்பம் ஒரு புதிய அளவுகோலை அமைத்து வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile