அடுத்து நாங்க 64MP கேமரா சென்சாருடன் கொண்டு வருவோம். Xiaomi.

அடுத்து  நாங்க 64MP  கேமரா  சென்சாருடன் கொண்டு  வருவோம். Xiaomi.

சாம்சங் நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது ISOCELL பிரைட் GW1 64 எம்.பி. பிரைமரி கேமரா சென்சாரை சமீபத்தில் அறிமுகம் செய்தது. மேலும்  இந்த கேமரா சென்சாரை வர இருக்கும் Galaxy A 70S ஸ்மார்ட்போனில் வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இருப்பினும் , 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போனை சியோமி வெளியிடலாம் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகி அதன்பின் மற்ற நாடுகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இது ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 சாசம்சங் நிறுவனத்தின் அதிக ரெசல்யூஷன் கொண்ட சென்சார் ஆகும். இது 0.8 மைக்ரோமீட்டர் பிக்சல் கொண்ட சென்சார் ஆகும். இதில் சாம்சங் டெட்ராசெல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிகசல்களை ஒன்றிணைத்து ரெமோசைக் வழிமுறையில் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் 16 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது.

மேலும் இந்த சென்சார் ஃபேஸ் டிடெக்ஷன் ஆட்டோ ஃபோகஸ் வசதியை வழங்குகிறது. வீடியோவை பொருத்தவரை லைவ்க்கு 480 ஃபிரேம்கள் வீதம் (480 FPS) ஃபுல் ஹெச்.டி. ரெக்கார்டிங்கை சப்போர்ட் செய்யும். இத்துடன் சினிமா தர ஸ்லோ-மோஷன் வீடியோ கேப்ச்சர் வசதியும் கொண்டிருக்கிறது

சரியான வெளிச்சமுள்ள பகுதிகளில் இந்த சென்சார் 64 எம்.பி. தரத்தில் அதிக துல்லியமாக புகைப்படங்களை வழங்கும். பிரைட் GW1 சென்சாரில் டூயல் கன்வெர்ஷன் கெயின் வழங்கப்பட்டுள்ளது. இது சென்சார் பெறும் வெளிச்சத்தை எலெக்ட்ரிக் சிக்னலாக மாற்றுகிறது. இந்த சென்சார் ரியல்-டைம் HDR  வசதியை 100 டெசிபல்கள் வரை சப்போர்ட் செய்யும் என சாம்சங் தெரிவித்துள்ளது..

சர்வதேச சந்தையில் 64 எம்.பி. சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் ஏற்கனவே 48 எம்.பி. ISOCELL GM1 சென்சார் கொண்டிருக்கிறது. இதனை பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன்களில் வழங்கி வருகின்றன.

அதனை தொடர்ந்து , தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமியின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் சாம்சங்கின் 64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 கேமரா சென்சாருடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் மற்றும் இதன் சிறப்பம்சங்கள் பற்றி எவ்வித விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo