POCO யின் புதிய போன்அறிமுக தேதி வெளியாகியுள்ளது பல அம்சங்கள் லீக்

HIGHLIGHTS

Poco அதன் X சீரிஸ் போனை அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிற

இந்த போனின் பெயர் Poco X8 Pro ஆகும்

POCO X8 Pro மார்ச் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்

POCO யின் புதிய போன்அறிமுக தேதி வெளியாகியுள்ளது பல அம்சங்கள் லீக்

Poco அதன் X சீரிஸ் போனை அறிமுகம் செய்ய தயார் செய்து வருகிறது இந்த போனின் பெயர் Poco X8 Pro ஆகும் தற்பொழுது இந்த போனின் டீசர் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் டீசர் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போனின் தேதி மற்றும் பல அம்சங்கள் வெளியாகியுள்ளது அவை முழுசா பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

POCO X8 Pro இந்திய அறிமுக தேதி

POCO X8 Pro- வின் வெளியீட்டு தேதியை நிறுவனம் நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது . Xiaomiforall-இன் அறிக்கையின்படி, POCO X8 Pro மார்ச் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. Flipkart வெப்சைட்டின் URL இணைப்பு இந்தத் தகவலை வழங்குகிறது. நிறுவனம் போனின் வடிவமைப்பையும் டீசர் செய்துள்ளது, இது டீப் நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

POCO X8 Pro டிசைன்

POCO X8 Pro-வின் பின்புற வடிவமைப்பு இங்கே தெரியும். நிறுவனம் இந்த போனுக்கு ஒரு ஆக்ரோஷமான சிக்னேச்சர் டிசைனை வழங்கியுள்ளது. பின்புறத்தில் ஒரு மாத்திரை வடிவ வட்ட கேமரா தொகுதி தெரியும். தொலைபேசியில் தட்டையான விளிம்புகளைக் காணலாம். ‘Stay Tuned for neXt’ என்ற டேக்குடன் நிறுவனம் போனை டீஸர் செய்துள்ளது. இதில், பிராண்ட் neXt-க்குள் X-ஐ ஹைலைட் செய்துள்ளது. பின்புற பேனல் தட்டையாகவும், கேமரா தொகுதி செங்குத்தாகவும் உள்ளது. LED ஃபிளாஷ் அதனுடன் வைக்கப்பட்டுள்ளது. கேமரா லென்ஸ் உலோகமாக வளையங்கள் போல் தெரிகிறது. POCO லோகோ போனின் கீழ் இடது பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

POCO X8 Pro சிறப்பம்சம்

POCO X8 Pro-யின் அம்சங்களை ஒரு சில லீக் ஆகியுள்ளது . இந்த போன் 6.59-இன்ச், 1.5K AMOLED டிஸ்ப்ளேவை 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் கொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது OIS சப்போர்டுடன் 50MP ப்ரைமரி கேமராவையும் கொண்டிருக்கலாம். இது 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 6500mAh பேட்டரியையும் கொண்டிருக்கலாம். டீஸர் பக்கத்தில் உள்ள அம்சங்கள் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் டீஸர் நிறுவனம் மிட் ரேன்ஜ் போனை ஈர்க்கக்கூடிய அம்சங்களை வழங்க முடியும் என்று கூறுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile