XIAOMI MI CC9 யில் 48MP பின் கேமரா மற்றும் 32MP செல்பி கேமராவுடன் இருக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு.
Xiaomi அதன் அப்கம்மிங் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் Mi CC9 மற்றும் Mi CC9 அறிமுகம் செய்வதற்கு முழுமையான தயரையும் செய்து வருகிறது.சீனாவில் இந்த ஸ்மார்ட்போனை ஜூலை 2 தேதி அறிமுகம் செய்யப்படும்.
Surveyசியோமி நிறுவனம் தனது CC9 ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, பின்புறம் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இத்துடன் இரு கேமராக்களிலும் எடுக்கப்பட்ட போட்டாக்களையும்,ஷேர் செய்யப்பட்டுள்ளது.. இந்த ஸ்மார்ட்போன் லிட்டில் ஃபேரி என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது. இத்துடன் லிட்டில் பிரின்ஸ் என்ற பெயரில் மற்றொரு ஸ்மார்ட்போன் உருவாகி வருகிறது.
சியோமி CC 9e ஸ்மார்ட்போனின் விவரங்கள் கடந்த வாரம் TENAA வலைதளத்தில் லீக் ஆனது. இத்துடன் CC9 மெய்டு கஸ்டம் எடிஷன் ஸ்மார்ட்போனில் ஃப்ளிப் கேமரா வழங்கப்பட இருக்கிறது. புதிய சிசி சீரிஸ் ஸ்மார்ட்போனின் சிறிய வீடியோ ஒன்றையும் சியோமி தலைமை செயல் அதிகாரி பதிவிட்டிருந்தார்.
சியோமி மற்றும் மெய்டு நிறுவனங்கள் ஃப்ளிப் கேமரா போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அசுஸ் சென்ஃபோன் 6 போன்று கேமரா அமைப்பில் புதிய ஸ்மார்ட்போன் மூன்று கேமரா லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக M1904F3BC என்ற மாடல் நம்பர் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் சீன வலைதளத்தில் லீக் ஆனது. இது புதிய Mi சிசி9இ ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் AMOLED FHD பிளஸ் டாட் நாட்ச் ஸ்கிரீன், 4000MAH . பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile