Mi A3 மூன்று கேமராக்களுடன் இன்று பகல் 12 மணிக்கு முதல் விற்பனைக்கு வருகிறது.
சியோமி தனது Mi A3 போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில், நிறுவனம் சியோமி மி ஏ 3 ஐ இந்திய சந்தையில் ரூ .12,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இன்று பகல் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு வருகிறது.இது ஆண்ட்ராய்டு ஒன் போன் ஆகும் , இதில் புதிய Helix Wave pattern (Blue variant) அதன் பின்புறத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் மூன்று வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதில் Not Just Blue, More Than White, Kind of Grey, அடங்கியுள்ளது.
SurveyXiaomi
சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் நாட் ஜஸ்ட் புளு, மோர் தான் வைட் மற்றும் கைன்ட் ஆஃப் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் விலை ரூ. 12,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. ஸ்டோரேஜ் மாடல் ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு வருகிறது.
அறிமுக சலுகை
இதன் அறிமுக சலுகையாக HDFC கார்ட் பயன்படுத்தி வாங்கினால்,750ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை 250ரூபாய் செலுத்தி மாதாந்திர EMI யிலும் வாங்கி செல்லலாம்.இதனுடன் ஏர்டெல் 249ரூபாயின் ரீஜார்ஜ்ஜில் அன்லிமிடேட் கலைகள் மற்றும் டேட்டா நன்மைகள் வழங்கப்படுகிறது.
சியோமி Mi A3 சிறப்பம்சங்கள்:
– 6.08 இன்ச் 1560×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 610 GPU
– 4 ஜி.பி. LPDDR4x ரேம், 64 ஜி.பி. (UFS 2.1) மெமரி
– 6 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி- ஹைப்ரிட் டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், f/1.79, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
– 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.2
– 2 எம்.பி. டெப்த் சென்சார், 1.75μm பிக்சல், f/2.4
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, இன்ஃப்ராரெட் சென்சார்
– ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i கோட்டிங்)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் Mi ஏ3 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
இதில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் செல்ஃபி கேமரா நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து 1.6μm பிக்சல்களை வழங்குகிறது.
3டி வளைந்த கிளாஸ் பேக் கொண்டிருக்கும் Mi ஏ3 மாடலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்படுகிறது. Mi ஏ3 ஸ்மார்ட்போனில் 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile