Xiaomi யின் புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கேமராவுடன் இருக்கும்.

Xiaomi யின் புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கேமராவுடன் இருக்கும்.
HIGHLIGHTS

சியோமி நிறுவன துணை தலைவர் லு வெய்பிங் தனது வெய்போ அக்கவுண்ட்டில் தெரிவித்து இருந்தார்.

Xiaomi நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட கான்செப்ட்களில் அந்நிறுவனம் அன்டர்-டிஸ்ப்ளே கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவது தெரியவந்தது. இந்த கேமரா ஸ்கிரீனின் கீழ் இருக்கும், இதனை பயன்படுத்த முற்படும் வரை கேமரா இருப்பது ஸ்மார்ட்போனை பார்க்கும் போது தெரியாது.

இதனை வெற்றிகரமாக செயல்படுத்த வைக்க பிக்சல்களின் அடர்த்தி இடையூறாக இருக்கலாம். கேமராவுக்கும், வெளியில் உள்ள பொருளுக்கும் இடையில் செல்ல வேண்டிய வெளிச்சத்தை பிக்சல்களே மறைத்து கொள்ளலாம்.இது இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் போன்ற தொழில்நுட்பம் ஆகும். எனினும், இது கைரேகை சென்சாருக்கு மாற்றாக செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த தொழில்நுட்ப துறையும் இதற்கான தீர்வை எட்டும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார்.இதே பிரச்சனையை சியோமி நிறுவன துணை தலைவர் லு வெய்பிங் தனது வெய்போ அக்கவுண்ட்டில் தெரிவித்து இருந்தார்.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனிற்கு சியோமி காப்புரிமை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. காப்புரிமை புகைப்படங்களில் இரண்டு வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன் இடம்பெற்றுள்ளது. இதில் ஒன்று இடதுபுறத்திலும், மற்றொன்றில் ஸ்கிரீன் நடுவில் இன் டிஸ்ப்ளே கேமரா சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஸ்மார்ட்போன் கேமராவை இயக்கியதும், சென்சாரின் மேல் இருக்கும் ஸ்கிரீன் கண்ணாடி போன்று மாறுகிறது. இதனால் அதை கடந்து வெளிச்சம் உள்ளே போகும். இதை ஆஃப் செய்ததும் ஸ்கிரீன் வழக்கமானதாக மாறி நிறங்களை பிரதிபலிக்கும். இந்த தொழில்நுட்பத்துடன் வெளியாகும் ஸ்மார்ட்போன் விலை நிச்சயம் அதிகமாக இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo