Xiaomi யின் அடுத்த ஸ்மார்ட்போன் 5 பாப்-அப் கேமரா மற்றும் போல்டபில் உடன் வரும்

Xiaomi யின்  அடுத்த ஸ்மார்ட்போன் 5 பாப்-அப் கேமரா மற்றும் போல்டபில்  உடன் வரும்

இந்த ஸ்மார்ட்போனில் ஐந்து சென்சார்கள் கொண்ட பாப் அப் கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இவை பயனர் வைத்திருப்பதை பொருத்து பிரைமரி அல்லது செல்ஃபி கேமரா என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.சியோமி நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாக சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது.

ஸ்மார்ட்போனின் வரைபடங்களின் படி இதில் மெல்லிய பெசல்கள், டிஸ்ப்ளே நாட்ச் இல்லாதது தெளிவாக தெரிகிறது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்ட காப்புரிமைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, கடந்த வாரம் அச்சிடப்பட்டுள்ளது. காப்புரிமையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் பாப்-அப் தெரிகிறது.

இவைதவிர சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. முன்னதாக நோக்கியா 9 பியூர்வியூ ஸ்மார்ட்போன் ஐந்து கேமராக்களுடனும் சியோமி Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஐந்து கேமரா சென்சார்களுடன் அறிமுகம் செய்யப்பட்டன. 

இத்துடன் 6.47 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 5260 Mah. பேட்டரி, 30வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

சியோமி Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல் லென்ஸ் 5X டெலிபோட்டோ லென்ஸ் போன்று செயல்படுகிறது. இத்துடன் 12 எம்.பி. சென்சார், 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் மற்றும் டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo