Vivo-Z1 Pro தகவல் வெளியானது 32MP செலஃபீ கேமரா கொண்டிருக்கும்.

Vivo-Z1 Pro  தகவல் வெளியானது 32MP  செலஃபீ கேமரா கொண்டிருக்கும்.

விவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இந்திய வெளியீட்டை விவோ டீசர்களின் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் புதிய விவோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் வழங்கப்படுகிறது.
 
இதுதவிர விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் புதிய ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் 10 என்.எம். ஃபின்ஃபெட் வழிமுறையில் உருவாக்கப்பட்டதாகும். 

மேலும் ஸ்னாப்டிராகன் எக்ஸ்15 எல்.டி.இ. கொண்டிருப்பதால் விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் கொண்டு அதிகபட்சம் நொடிக்கு 800 எம்.பி. (800 Mbps) வேகத்தில் தரவுகளை டவுன்லோடு செய்ய முடியும். இத்துடன் ஹெச்.டி.ஆர். 10 டிஸ்ப்ளே சப்போர்ட் மற்றும் பிரத்யேக ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) என்ஜின் வழங்கப்படுகிறது.

மற்ற சிறப்பம்சங்கள் தவிர புதிய விவோ ஸ்மார்ட்போன் பப்ஜி மொபைல் கிளப் ஓபன் 2019 இன் அதிகாரப்பூர்வ ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக விவோ Z 1 ப்ரோ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என விவோ அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. 

புதிய பிராசஸருடன் ஆக்டா-கோர் க்ரியோ 360 சி.பி.யு. மற்றும் அட்ரினோ 616 ஜி.பி.யு. கிராஃபிக்ஸ் வழங்கப்படுகிறது. இதை கொண்டு 4K தரத்தில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

புதிய ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர் தவிர, இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. இன்-டிஸ்ப்ளே கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்கள், இதன் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo