VIVO Y91 யின் 3GB ரேம் வேரியண்ட் விலை குறைந்துள்ளது.
VIVO Y91 ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது
VIVO Y91 மாடல் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 8490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது
VIVO Y91 ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது
இந்தியாவில் விவோ நிறுவனம் தனது VIVO Y91 ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது. புதிய விலை அந்நிறுவன வலைதளத்தில் மாற்றப்பட்டு விட்டது.
விலை குறைப்பை தொடர்ந்து விவோ வை91ஐ மாடல் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 8490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை விவோ வலைதளம், அமேசானில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.
Surveyவிவோ VIVO Y91 ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி + 16 ஜிபி, 2 ஜிபி + 32 ஜிபி மற்றும் 3 ஜிபி + 32 ஜிபி போன்ற மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த மாடல் ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் பேஸ் மாடல் 2 ஜிபி + 16 ஜிபி மாடல் ரூ. 7490, 2 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
VIVO Y91 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் HD பிளஸ் 19:9 ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஹீலியோ P22 ஆக்டா-கோர் 12 என்.எம். பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8 வழங்கப்பட்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
