போட்டான் பாரு ஒரே போடு Vivo புதிய போன் அறிமுகம் செய்யும் குஷியில் இந்த மாடலுக்கு அதிரடி டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Vivo இன்று அதன் புதிய Vivo T5 போனை அறிமுகம் செய்ய இருக்கிறது

Vivo Y31t 5G போனில் இப்பொழுது அதிரடியாக பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,500 டிஸ்கவுண்ட்

இந்த போனில் இருக்கும் முழு ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

போட்டான் பாரு ஒரே போடு Vivo புதிய போன் அறிமுகம் செய்யும் குஷியில் இந்த மாடலுக்கு அதிரடி டிஸ்கவுண்ட்

Vivo இன்று அதன் புதிய Vivo T5 போனை அறிமுகம் செய்ய இருக்கிறது, அதனை தொடர்ந்து அதன் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வெர்ஷன் Vivo Y31t 5G போனில் இப்பொழுது அதிரடியாக பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,500 டிஸ்கவுண்ட்வழங்கப்படுவதால் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் முழு ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo Y31t 5G டிஸ்கவுண்ட் ஆபர்

Vivo Y31t 5G போனில் ரூ,29,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,28,499க்கு வாங்கலாம்.இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போனின் உண்மையான MRP விலை ரூ,44,999 ஆகும் அதிலிருந்து பார்க்கும்போது இப்பொழுது ஒரே அடியாக ரூ,16,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

Vivo Y31t 5G சிறப்பம்சம்.

Vivo Y31t 5G என்பது ஒரு டூயல்-சிம் போனாகும் . இது ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட விவோவின் சமீபத்திய OriginOS 6 உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.75-இன்ச் HD+ (720 x 1,608 பிக்சல்கள்) LCD ஸ்க்ரீன் உள்ளது. இது 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 1,250 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் மற்றும் 83 சதவீத NTSC கலர் லிமிட் ஆகியவற்றை வழங்குகிறது. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68 + IP69 ரேட்டிங்டுகளுடன் இந்த போன் வருவதாக அந்த தொழில்நுட்ப நிறுவனம் கூறுகிறது.

புதிய Vivo Y31T 5G, குவால்காம் நிறுவனத்தின் 4nm ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 1.95GHz வேகத்தில் இயங்கும் ஆறு செயல்திறன் கோர்களும், 2.2GHz உச்சபட்ச கிளாக் வேகத்தை வழங்கும் இரண்டு செயல்திறன் கோர்களும் உள்ளன. மேலும், இதில் 6GB வரை LPDDR4x ரேம் மற்றும் 256GB வரை UFS 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பிற்காக, இந்த போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் மற்றும் முகத்தை அடையாளம் கண்டு திறக்கும் வசதியும் உள்ளது.

கேமரா பிரிவில், விவோ Y31T 5G ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 50 மெகாபிக்சல் (f/2.0) முதன்மை கேமராவும், அதனுடன் 2 மெகாபிக்சல் (f/2.4) போக்கே சென்சாரும் இணைக்கப்பட்டுள்ளன. இது தவிர, செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக விவோ Y31T 5G-யில் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் (f/2.05) கேமராவும் உள்ளது. பின்புற கேமராவில் நைட், போர்ட்ரெய்ட், வீடியோ, லைவ் போட்டோ, ஸ்லோ-மோ, டைம்-லேப்ஸ், ப்ரோ மற்றும் பனோ ஆகிய மோட்களும் உள்ளன.

இதையும் படிங்க ஆப்பிள் iPhone பிரியர்களுக்கு அதிரவைக்கும் சூப்பர் பேங்க் ஆபரின் கீழ் ஒரே அடியாக ரூ,6000 வரை டிஸ்கவுண்ட்

விவோ Y31T 5G, 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 7,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும், இது கனெக்ஷன் வசதிக்காக 5G, 4G LTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 4.2, ஒரு USB டைப்-C போர்ட், GPS, BeiDou, GLONASS, Galileo மற்றும் QZSS ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது . இதில் உள்ள சென்சார்களின் பட்டியலில் ஆக்சிலரோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார், இ-காம்பஸ், ப்ராக்சிமிட்டி சென்சார் மற்றும் கைரோஸ்கோப் ஆகியவை அடங்கும். இந்த ஃபோனின் டைமென்ஷன் 166.64×78.43×8.39mm மற்றும் இதன் எடை சுமார் 219g ஆகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile