Vivo இந்த போனின் அறிமுகத்திற்க்கு முன்பே அத்தனை தகவலும் லீக்

Vivo இந்த போனின் அறிமுகத்திற்க்கு முன்பே அத்தனை தகவலும் லீக்
HIGHLIGHTS

Vivo அதன் V30 ஸ்மார்ட்போன் சீரிஸில் மற்றும் ஒரு போனை அறிமுகம் செய்துள்ளது

Vivo V30 மற்றும் V30 Proஅறிமுகப்படுத்தியுள்ளது, இப்போது Vivo V30e 5G இந்த சீரிஸில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

இந்த போனின் அனைத்து சிறப்பம்சங்களும் வெளியிடப்பட்டுள்ளன

Vivo அதன் V30 ஸ்மார்ட்போன் சீரிஸில் மற்றும் ஒரு போனை அறிமுகம் செய்துள்ளது நிறுவனம் ஏற்கனவே இந்த சீரிஸின் Vivo V30 மற்றும் V30 Proஅறிமுகப்படுத்தியுள்ளது, இப்போது Vivo V30e 5G இந்த சீரிஸில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன், இந்த போனின் அனைத்து சிறப்பம்சங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதன் டீஸர் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலும் வெளியாகியுள்ளது. ஃபோனில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே இருக்கும், இது 120Hz ரெப்ராஸ் ரேட்டைகொண்டிருக்கும். அனைத்து அம்சங்களையும் பற்றி பார்க்கலாம்.

Vivo V30e 5G இந்தியாவில் அறிமுகம் செய்ய தயார் ஆகி வருகிறது இருப்பினும், நிறுவனம் அதன் வெளியீட்டு தேதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அதன் பல சிறப்பம்சங்கள் டீஸ் செய்யப்பட்டுள்ளன. ஃபோனில் ஒரு வட்ட கேமரா மாட்யூல் இருப்பதை டீஸர் படத்தில் காணலாம். இதில் இரண்டு கேமராக்கள் மற்றும் ரிங் எல்இடி ஃபிளாஷ் லைட் உள்ளது. இந்த போன் சில்க் ப்ளூ மற்றும் வெல்வெட் ரெட் கலர்களில் வெளிவரவுள்ளது. இதற்கிடையில், நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் சுதன்ஷு ஆம்போர் தனது சோசியல் மீடிய ஊடக கைப்பிடியில் ஒரு இடுகையின் மூலம் அதன் அனைத்து சிறப்பம்சங்கள் பகிர்ந்துள்ளார்.

டிப்ஸ்ட்டர் யின் படி இந்த போனில் 6.78 இன்ச் யின் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது மேலும் இதில் FHD+ இருப்பதாக கூறப்படுகிறது 120Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த ஃபோன் IP64 மதிப்பிடப்பட்ட சாதனமாக இருக்கும். இதன் திக்னஸ் 7.69 mm மட்டுமே இருக்கும். கர்வ்ட் எட்ஜ் உடன் இந்த போன் வரப் போகிறது. போனின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா உள்ளது, இது Sony IMX882 சென்சார் என்று கூறப்படுகிறது. இதனுடன், 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்காக முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

Vivo V30e 5G ஆனது 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. போனில் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரல் 1 சிப்செட் உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான FunTouch OS 14 யில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ரேம் கான்பிக்ரேசன் உடன் வரலாம், இதன் விலை ரூ 30 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கலாம்.

இதையும் படிங்க: Jio ப்ரீபெயிட் திட்டத்தில் கிடைக்கும் தினமும் 2.5GB டேட்டா

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo