Vivo T3 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் டாப் 5 அம்சங்கள் பாருங்க

Vivo T3 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் டாப் 5 அம்சங்கள் பாருங்க
HIGHLIGHTS

விவோ இந்திய சந்தையில் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் Vivo T3 5Gஅறிமுகம் செய்துள்ளது

இன்னும் Flipkart மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து வாங்கலாம்

நீங்கள் Vivo T3 5G வாங்க விரும்பினால், அதை வாங்கும் முன் சிறந்த எக்ஸ்சேஞ் ஸ்மார்ட்போன்களைப் பார்க்கலாம்.

விவோ இந்திய சந்தையில் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் Vivo T3 5Gஅறிமுகம் செய்துள்ளது, இருப்பினும், இந்த போனை இன்னும் Flipkart மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து வாங்கலாம். நீங்கள் Vivo T3 5G வாங்க விரும்பினால், அதை வாங்கும் முன் சிறந்த எக்ஸ்சேஞ் ஸ்மார்ட்போன்களைப் பார்க்கலாம். போனின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்

Vivo T3 5G விலை மற்றும் விற்பனை

Vivo T3 5G யின் 8GB + 128GB வேரியண்டின் விலை 19,999ரூபாயாகும் மற்றும் 8GB + 256GB வேரியண்டின் விலை 21,999ரூபாயாகும், பேங்க் சலுகையில், SBI, ICICI மற்றும் HDFC பேங்க் கார்ட்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.2,000 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம். இது தவிர ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும். Vivo ஸ்டோர் மூலம் வாங்கும் போது இலவச Vivo XE710 இயர்போன்களைப் பெறலாம்.

Vivo T3 5G டாப் 5 அம்சம்

Vivo T3 5G டிஸ்ப்ளே

Vivo T3 5G ஆனது 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டது, அதன் தீர்மானம் 2400 x 1080 பிக்சல்கள் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் இருக்கிறது

ப்ரோசெசர்

இந்த போனின் MediaTek Dimensity 7200 சிப் கொண்டுள்ளது, இதில் 8GB RAM மற்றும் 128GB/256GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது

கேமரா

கேமரா பற்றி பேசினால், இந்த போன் OIS சப்போர்டுடன் 50 மெகபிக்சல் ப்ரைமரி சோனி IMX882 கேமரா 2-மெகாபிக்சல் டெப்த் கேமரா மற்றும் ஃப்ளிக்கர் சென்சார் சேர்க்கப்பட்டுள்ளது., முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

பேட்டரி

இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் இது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 44W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14 யில் இயங்குகிறது.

கனெக்டிவிட்டி

இதில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. இது இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பையும் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.3, டூயல் சிம் மற்றும் யுஎஸ்பி டைப்-சி ஆகியவை அடங்கும். இந்த ஃபோன் IP54 ரேட்டிங்கை கொண்டுள்ளது, இது தூசி மற்றும் தெறிப்பிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது.

இதையும் படிங்க: BSNL புதிய 2 Broadband plans உடன் 4000GB டேட்டா மற்றும் OTT நன்மை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo