50MP செலஃபீ கேமராவுடன் விவோவின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்.

50MP செலஃபீ கேமராவுடன் விவோவின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்.
HIGHLIGHTS

ஸ்மார்ட்போன் ப்ராண்ட் அதன் புதிய கேமரா போன் சீரிஸ் Vivo S17 series அறிமுகம் செய்துள்ளது

இந்த சீரிஸின் கீழ் Vivo S17, Vivo S17t மற்றும் Vivo S17 Pro ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

மூன்று போன்களிலும் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

ஸ்மார்ட்போன் ப்ராண்ட்  அதன் புதிய கேமரா போன் சீரிஸ்  Vivo S17 series அறிமுகம் செய்துள்ளது, இந்த  சீரிஸின்  கீழ் Vivo S17, Vivo S17t மற்றும் Vivo S17 Pro ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தொடரில் 6.78 இன்ச் FullHD Plus AMOLED டிஸ்ப்ளே மற்றும் 4,600mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஃபோன் மூலம் வேகமாக சார்ஜ் செய்வதும் துணைபுரிகிறது. மூன்று போன்களிலும் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. 

Vivo S17 series விலை தகவல்.

Vivo S17 12 மற்றும் Vivo S17t ஆகியவை 12 ஜிபி ரேம் வரை 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் வருகின்றன. இரண்டு போன்களின் ஆரம்ப விலை 2,499 சீன யுவான் (சுமார் ரூ. 29,100). அதே நேரத்தில், Vivo S17 Pro கருப்பு, ஐஸ் ஒயிட் ஜேட் மற்றும் மவுண்டன் சீ கிரீன் வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனை 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை ஸ்டோரேஜின். போனின் ஆரம்ப விலை 3,099 (சுமார் ரூ.36,100).வாங்கலாம் இதை தவிர இந்த போன் Vivo S17 சீரிஸ் கருப்பு, மவுண்டன் சீ கிரீன் மற்றும் சீ ஆஃப் ஃப்ளவர் வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Vivo S17, VIvo S17t மற்றும் Vivo S17 Pro  சிறப்பம்சம்.

இந்த சீரிஸில் இந்த மூன்று போனிலும் 6.78 இன்ச் முழு HD ப்ளஸ் AMOLED டிஸ்பிளே வழங்கப்படுகிறது இந்த டிஸ்பிளே உடன் 120 ஹாட்ஸ்  ரெப்ரஸ் ரெட் கொண்டுள்ளது  மற்றும் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 20:9  கொடுக்கப்பட்டுள்ளது, போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையின் கீழ் OriginOS 3 கொடுக்கப்பட்டுள்ளது. Qualcomm Snapdragon 778G+ ப்ரோசெசர் Vivo S17 யில் கொடுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் MediaTek Dimensity 8050 சிப்செட் Vivo S17T இல் கிடைக்கிறது. Vivo S17 Pro MediaTek Dimensity 8200 சிப்செட் உடன் வருகிறது. தொடருடன், 12GB வரை LPDDR4x ரேம் மற்றும் UFS 3.1 512GB உள்ளடங்கிய ஸ்டோரேஜ் ஆதரிக்கப்படுகிறது.

கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், Vivo S17 தொடரில் 50 மெகாபிக்சல் முன் கேமரா கிடைக்கிறது. Vivo S17 மற்றும் Vivo S17t வகைகளில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் 8 மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய இரட்டை பின்புற கேமரா அலகு இடம்பெற்றுள்ளது.

Vivo S17 Pro உடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு கிடைக்கிறது. போனில் OIS ஆதரவுடன் 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளது. Vivo S17 Pro உடன் பெரிய ரிங் ஃபிளாஷ்லைட்டுக்கான ஆதரவும் உள்ளது.

மூன்று ஃபோன்களும் 4,600mAh பேட்டரியைக் கொண்டுள்ளன, 80W வயர்டு ஃபிளாஷ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன். ஸ்மார்ட்போன்கள் USB Type-C சார்ஜிங் போர்ட் மற்றும் ஆடியோ ஜாக் உடன் வருகின்றன. செக்யுரிட்டிக்கு, ஃபோனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் AI ஃபேஸ் அன்லாக் அம்சம் உள்ளது. போன்கள் வைஃபை 6, ஜிபிஎஸ், NFC மற்றும் புளூடூத் வி5.2 கனெக்டிவிட்டி ஆதரிக்கின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo