நான்கு கேமராக்கள் மற்றும் 5000Mah பேட்டரி கொண்ட Tecno Spark 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.

நான்கு கேமராக்கள் மற்றும் 5000Mah பேட்டரி கொண்ட Tecno Spark 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.
HIGHLIGHTS

டெக்னோ பிராண்டின் புதிய டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் மற்றும் ஹைஒஎஸ் 6.1 இயங்குதளம், 6.6 இன்ச் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

Tecno Spark 5 சிறப்பம்சங்கள்

– 6.6 இன்ச் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் பிராசஸர்
– ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் மற்றும் ஹைஒஎஸ் 6.1
– 2 ஜிபி ரேம்
– 32 ஜிபி மெமரி  
– 13 எம்பி பிரைமரி கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா 
– 2 எம்பி டெப்த் சென்சார்
– நான்காவது கேமரா சென்சார், குவாட் எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ்
– 4ஜி வோல்ட்இ, 3.5 எம்எம் ஆடியோ ஜாக்

இத்துடன் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. மேலும் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் நான்காவது கேமரா சென்சார் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவாட் எல்இடி ஃபிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

விலை தகவல் 

புதிய டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் மிஸ்டி கிரீன், வகேஷன் புளூ, ஐஸ் ஜாடெய்ட் மற்றும் ஸ்பார்க் ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. தற்சமயம் கானாவில் விற்பனைக்கு வந்திருக்கும் ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் விலை GHS720 இந்திய மதிப்பில் ரூ. 9,390 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய வெளியீடு பற்றிய விவரங்கள் அறியப்படவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo