Tecno அறிமுகம் செய்தது இந்தியாவின் முதல் 6000mAh பேட்டரி 70W பாஸ்ட் சார்ஜிங்

Tecno அறிமுகம் செய்தது இந்தியாவின் முதல் 6000mAh பேட்டரி 70W பாஸ்ட் சார்ஜிங்
HIGHLIGHTS

Tecno Pova 6 Pro 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த பவர்புல் கேமிங் ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2024) யில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த கேமிங் ஸ்மார்ட்போனில் 70W ஃபாஸ்ட் சார்ஜிங், 108MP கேமரா போன்ற பல அருமையான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன

Tecno Pova 6 Pro 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டெக்னோவின் இந்த பவர்புல் கேமிங் ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2024) யில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கேமிங் ஸ்மார்ட்போனில் 70W ஃபாஸ்ட் சார்ஜிங், 108MP கேமரா போன்ற பல அருமையான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதன் விலை மற்றும் இதன் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

Tecno Pova 6 Pro விலை தகவல்.

டெக்னோவின் இந்த கேமிங் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.19,999. அதே நேரத்தில், இதன் டாப் வேரியண்ட் ரூ.21,999 ஆகும். இந்த மொபைலின் முதல் விற்பனை e-commerce வலைத்தளமான Amaozon யில் ஏப்ரல் 4, 2024 அன்று மதியம் 12 மணிக்கு ஏற்பாடு செய்யப்படும். முதல் விற்பனையில் போனை வாங்கும் பயனர்களுக்கு இந்த போனில் ரூ.2,000 வரை வங்கி தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, இந்த போனுடன் நிறுவனம் 4,999 ரூபாய் மதிப்புள்ள Tecno S2 ஸ்பீக்கரை இலவசமாக வழங்குகிறது.

Tecno Pova 6 Pro 5G டாப் 5 அம்சங்கள்

Tecno Pova 6 Pro 5G டிஸ்ப்ளே

Tecno Pova 6 Pro அம்சங்களை பற்றி பேசினால், இது ஒரு கேமிங் ஸ்மார்ட்போன் ஆகும், இந்த போனில் 6.78 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இந்த போனில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் ஹை செம்பளிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது இது பஞ்ச்-ஹோல் கட் டிசைனுடன் கூடிய காட்சியைக் கொண்டுள்ளது, இது 2160 ஹெர்ட்ஸ் PWM டிமிங் மற்றும் TUV ரைன்லேண்ட் சர்டிபிகேட் இருக்கிறது.

ப்ரோசெசர்

இந்த போனில் MediaTek Dimensity 6080 ப்ரோசெசர் போனில் கொடுக்கப்பட்டுள்ளது. போன் சூடாகாமல் இருக்க, அதில் பெரிய கூலிங் ஏரியாவை கொடுத்துள்ளது அந்நிறுவனம். மேலும், இது கேமிங்கிற்கான 4டி வைப்ரேட் சென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

டெக்னோவின் இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரை ரேம் உடன் வருகிறது, இதை கூடுதலாக 12ஜிபி வரை அதிகரிக்கலாம் மேலும், இது 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதை மைக்ரோ SD கார்டு வழியாக அதிகரிக்க முடியும்.

கேமரா

இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில் மூன்று கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 108MP ப்ரைம் கேமரா கிடைக்கும். மேலும் இரண்டு பின்புற கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. டெக்னோவின் இந்த கேமிங் போனில் 32எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது.

பேட்டரி

இந்த கேமிங் போனில் 6000mAh பேட்டரியுடன் இதில் 70W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது 10W ரிவர்ஸ் சார்ஜிங் அம்சமும் போனில் வழங்கப்பட்டுள்ளது, கேமரகளுக்கு இந்த போனில் மிகவும் பெஸ்ட்டாக இருக்கும்

Infinix GT 10 Pro போலவே, அதன் பின்புறத்திலும் மினி LED பிளாஷ் வழங்கப்பட்டுள்ளன, இது நோட்டிபிகேசங்கள் சார்ஜிங் போன்றவற்றின் போது பலிங் செய்யும்.

இதையும் படிங்க: Oppo புதிய அவதார் போன் அறிமுகம், இதன் Look பார்த்து மயங்கிருவிங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo