அடுத்து Samsung 108MP பிரைமரி கேமராவுடன் அசத்தும் ஸ்மார்ட்போன் .

அடுத்து  Samsung  108MP பிரைமரி  கேமராவுடன் அசத்தும் ஸ்மார்ட்போன் .

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் 108 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் ஸ்மார்ட்போனின் கேமரா Mi மிக்ஸ் ஆல்ஃபா மற்றும் Mi நோட் 10 ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருந்ததை போன்று 4-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என கூறப்படுகிறது. இது குறைந்த வெளிச்சத்திலும் அதிக தெளிவான புகைப்படங்களை எடுக்கும்.

புதிய விவரங்கள் மூன்றாவது ஒன் யு.ஐ. 2.0 பீட்டாவிற்கான சாம்சங் கேமரா செயலியில் எக்ஸ்.டி.ஏ. டெவலப்பர்களிடம் இருந்து கிடைத்திருக்கிறது. கேமரா செயலியில் 12000 – 9000 பிக்சல் ரெசல்யூஷனை சப்போர்ட் செய்கிறது. 

108 எம்.பி. ISOCELL சென்சார் புகைப்படங்களை 27 எம்.பி. தரத்தில் வழங்கும். இது அனைத்து விதமான வெளிச்சங்களிலும் புகைப்படத்தின் தரத்தை குறையாமல் பார்த்துக் கொள்ளும் செயலியின் குறியீடுகளில் கேலக்ஸி எஸ்11 என குறிப்பிடப்படவில்லை என்றாலும் 108 எம்.பி. சென்சார் கொண்டிருக் கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. கேமராவுடன் 5X ஆப்டிக்கல் சூம் லென்ஸ் வழங்கப்படுகிறது..

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S11 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9830 ஆக்டா-கோர் பிராசஸரும், அமெரிக்காவில் வெளியாகும் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo